வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 53


பாகம் 53

ஜூன் 8, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் ஆல்ஜெர்னான் சிட்னி கில்பர்ட்டுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சிட்னி கில்பர்டின் வேண்டுகோளின்படி சகோதரர் கில்பர்ட்டின் பணியைப்பற்றியும் சபையில் நியமிப்பைப்பற்றியும் தீர்க்கதரிசி கர்த்தரிடம் விசாரித்தார்.

1–3, ஒரு மூப்பராக நியமனம் செய்யப்பட சிட்னி கில்பர்ட்டின் அழைப்பும் தேர்வும்; 4–7, ஒரு ஆயரின் பிரதிநிதியாகவும் அவன் சேவை செய்யவேண்டும்.

1 இதோ, எனது ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட், நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் உன்னுடைய ஜெபங்களைக் கேட்டேன்; இந்த கடைசி நாட்களில் கர்த்தராகிய நான் நிலை நிறுத்திய உனது அழைப்பைப்பற்றியும், சபையின் தெரிந்துகொள்ளுதலைப்பற்றியும் உனக்கு அறிவிக்கும்படியாக உன்னுடைய தேவனாகிய கர்த்தராகிய என்னை நோக்கி நீ அழைத்தாய்.

2 இதோ, உலகத்தின் பாவங்களுக்காக சிலுவையிலறையப்பட்ட கர்த்தராகிய நான், உலகத்தை நீ கைவிடும்படியாக உனக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தேன்.

3 எனது வார்த்தையின்படியும், கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதன்படியும், விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும், பாவங்களை விட்டு விடுதலையும் பிரசங்கிக்க ஒரு மூப்பராகவும் எனது நியமனத்தை உன்மீது எடுத்துக்கொள்;

4 இப்போதிலிருந்து கொடுக்கப்படுகிற கட்டளைகளின்படி, ஆயரால் நியமிக்கப்படுகிற இடத்தில் இந்த சபைக்கு ஒரு பிரதிநிதியாகவுமிரு.

5 மீண்டும், மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித், இளையவருடனும், சிட்னி ரிக்டனுடனும் உன்னுடைய பயணத்தை நீ மேற்கொள்ளலாம்.

6 இதோ, நீ பெறக்கூடிய முதல் நியமங்கள் இவைகளே, எனது திராட்சைத்தோட்டத்திலே நீ பிரயாசப்படுவதன்படி வரும் நேரத்தில் மீதியானவைகள் அறிவிக்கப்படும்.

7 மீண்டும், முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் என்பதை நீ அறிந்துகொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.