வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 77


பாகம் 77

ஏறக்குறைய மார்ச் 1832ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். “வேதங்களை மொழிபெயர்ப்பதுடன், சம்பந்தப்பட்ட பரிசுத்த யோவானின் வெளிப்படுத்தலின் பின்வரும் விளக்கத்தை நான் பெற்றேன்” என ஜோசப் ஸ்மித் வரலாறு குறிப்பிடுகிறது.

1–4, மிருகங்களுக்கு ஆவிகளுண்டு, நித்திய இன்பத்தில் வாசம்செய்யும்; 5–7, இந்த பூமிக்கு 7000 வருஷம் உலகப்பிரகாரமான நிலைமை உண்டு; 8–10, வெவ்வேறான தூதர்கள் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்து பூமியில் பணிவிடை செய்வார்கள்; 11, 144,000 பேரின் முத்திரித்தல்; 12–14, ஏழாம் ஆயிரம் வருஷத்தின் ஆரம்பத்தில் கிறிஸ்து வருவார்; 15, யூத தேசத்திற்கு இரண்டு தீர்க்கதரிசிகள் எழுப்பப்படுவார்கள்.

1 கே. வெளிப்படுத்தின விசேஷம் 4வது அதிகாரம் 6வது வசனத்தில் யோவானால் பேசப்பட்ட கண்ணாடி கடல் என்றால் என்ன?ப. அது பரிசுத்தமாக்கப்பட்ட, அழியாமையின், நித்திய நிலைமையில் பூமி.

2 கே. அதே வசனத்தில் பேசப்பட்டுள்ள நான்கு மிருகங்கள் மூலம் நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. தேவனின் பரதீசான பரலோகத்தை, மனுஷன், மிருகங்கள், ஊரும் பிராணிகள், மற்றும் ஆகாயத்துப் பறவைகளின், மகிழ்ச்சியைப்பற்றி விவரித்த, வெளிப்படுத்துபவனான யோவானால் பயன்படுத்தப்பட்ட உருவக விவரங்கள் அவை. ஆவிக்குரிய ஜீவன் உலகப்பிரகாரமானதைப் போலிருக்கின்றது, உலகப்பிரகாரமானது ஆவிக்குரியதைப் போலிருக்கின்றது, மனுஷனின் ஆவி, அவன் உருவத்திலிருக்கிறது, அது போலவே, தேவன் சிருஷ்டித்த மிருகம் மற்றும் ஒவ்வொரு ஜீவராசியின் ஆவியும் இருக்கிறது.

3 கே. நான்கு ஜீவன்களும் தனிப்பட்ட ஜீவன்களா, அல்லது வகைகளை அல்லது பிரிவுகளைக் குறிக்கின்றனவா?ப. யோவானுக்கு காண்பிக்கப்பட்ட அவைகளின் முன் தீர்மானிக்கப்பட்ட பிரிவின்படி அல்லது சிருஷ்டிப்பின் நோக்கத்தின்படி, ஜீவன்களின் வகைகளின் மகிமையைக் குறிக்க, அவைகளின் நித்திய இன்ப ஆனந்தத்தின்படி, அவைகள் நான்கு தனிப்பட்ட பிராணிகளாக வகுக்கப்பட்டிருக்கின்றன.

4 கே. மிருகங்களுக்கிருந்த கண்கள் மற்றும் சிறகுகள் மூலம் நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. அவைகளின் கண்கள் ஒளி மற்றும் ஞானத்தைக் குறிக்கின்றன, அதாவது, அவைகள் ஞானத்தால் நிறைந்திருந்தன, அவைகளின் சிறகுகள் அசைக்கவும், செயல்படவும் உள்ள வல்லமையைக் குறிப்பதாகும்.

5 கே. யோவானால் பேசப்பட்ட இருபத்து நான்கு மூப்பர்கள் மூலம் நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. யோவான் கண்ட இந்த மூப்பர்கள் ஊழியப்பணியில் உண்மையுள்ளவர்களாயிருந்து மரித்தவர்கள், இவர்கள் ஏழு சபைகளைச் சேர்ந்தவர்கள், பின்னர் தேவனின் பரதீசிலிருந்தார்கள் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

6 கே. ஏழு முத்திரைகளால் பின் பக்கத்தில் முத்திரையிடப்பட்ட யோவான் கண்ட புஸ்தகத்தின் மூலம் நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. தேவனின் வெளிப்படுத்தப்பட்ட சித்தமும், இரகசியங்களும், கிரியைகளும், ஏழாயிரம் வருஷங்களின்போது இந்த பூமியின் தொடர்ச்சி அல்லது அதன் உலகப்பிரகார தன்மையைக் குறித்து அவருடைய பொருளாதார மறைபொருட்கள் அதில் அடங்கியிருக்கின்றன என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

7 கே. முத்திரிக்கப்பட்ட ஏழு முத்திரைகளால் நாம் எதைப் புரிந்து கொள்ளவேண்டும்?ப. முதல் ஆயிரம் வருஷத்தின் காரியங்கள் முதல் முத்திரையில் அடங்கியிருக்கின்றன, இரண்டாவதில் இரண்டாவது ஆயிரம் வருஷத்தின் காரியங்களும், அப்படியே ஏழாவதுவரை என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

8 கே. வெளிப்படுத்தின விசேஷம் 7வது அதிகாரத்தின் 1வது வசனத்தில் பேசப்பட்ட நான்கு தூதர்களிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ளவேண்டும்?ப. தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட, பூமியின் நான்கு பாகங்களிலுமுள்ள ஜீவனைக் காக்கவும் அழிக்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள நான்கு தூதர்கள் அவர்கள், சகல ஜாதிகளுக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் அறிவிக்க நித்திய சுவிசேஷத்தை பெற்றிருக்கிறவர்கள், ஜீவனைத் தடுத்து முத்திரையிட்டு, பரலோகங்களை அடைக்கவும், இருளின் திசைகளுக்குள் தள்ளவும் அதிகாரம் கொண்டவர்கள் இவர்களே, என நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

9 கே. வெளிப்படுத்தின விசேஷம் 7வது அதிகாரம் 2வது வசனத்தில், கிழக்கிலிருந்து தூதன் ஏறிவருவதிலிருந்து நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. கிழக்கிலிருந்து ஏறிவந்த தூதன், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் மீதும் ஜீவிக்கிற தேவனின் முத்திரை கொடுக்கப்பட்டவன். ஆகவே அவன் நித்திய சவிசேஷத்தை வைத்திருக்கிற நான்கு தூதர்களையும் நோக்கி மகா சத்தமிட்டுச் சொன்னான், நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத்தீருமளவும் பூமியையும், சமுத்திரத்தையும், மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள். நீங்கள் அதைப்பெற்றுக்கொண்டால் இஸ்ரவேல் கோத்திரத்தாரை ஒன்றாக கூட்டிச்சேர்க்கவும் சகல காரியங்களையும் மறுஸ்தாபிதம் செய்யவும் வரக்கூடிய எலியாஸ் வரவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

10 கே. இந்த அதிகாரத்தில் பேசப்பட்டிருக்கிற காரியங்கள் எந்த சமயத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்?ப. ஆறாயிரம் வருஷங்களில் அல்லது ஆறாவது முத்திரை உடைக்கப்படும்போது அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

11 கே. இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலிருந்தும், ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் பன்னிரண்டாயிரம் பேராக இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர், முத்திரை போடப்பட்டதிலிருந்து நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. முத்திரிக்கப்பட்டவர்கள் நித்திய சுவிசேஷத்தை நிர்வகிக்க தேவனின் பரிசுத்த முறைமையின்படி நியமனம் செய்யப்பட்ட, பிரதான ஆசாரியர்கள், ஏனெனில் முதற்பேறானவரின் சபைக்கு அநேகரைக் கொண்டுவர பூமியின் தேசங்கள்மேல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிற தூதர்களால் அவர்கள் சகல ஜாதிகளிலும், இனங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலுமிருந்தும் நியமனம் செய்யப்பட்டவர்கள் இவர்களே, என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

12 கே. வெளிப்படுத்தின விசேஷம் 8வது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்காளத்தை ஊதுதலில், நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. தேவன் உலகத்தை ஆறு நாட்களில் சிருஷ்டித்தார், ஏழாவது நாளில் அவருடைய கிரியையை அவர் முடித்து அதை பரிசுத்தப்படுத்தினார், பூமியின் புழுதியிலிருந்து மனுஷனையும் உண்டாக்கினார், அந்தப்படியே ஏழாவது ஆயிரம் வருஷங்களின் ஆரம்பத்தில் கர்த்தராகிய தேவன், பூமியை பரிசுத்தப்படுத்தி, மனுஷனின் இரட்சிப்பை நிறைவேற்றி, சகல காரியங்களையும் நியாயந்தீர்த்து, அனைத்துக்கும் இறுதியில், அனைத்தையும் அவர் முத்திரையிட்ட பின்பு, அவருடைய அதிகாரத்தில் வைத்திராததைத் தவிர சகல காரியங்களையும் மீட்பார், ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுதல், ஏழாவது ஆயிரம் வருஷங்களின் ஆரம்பத்தில், தனது பணியை ஆயத்தம் செய்து, முடிப்பதாகும், அவருடைய வருகையின் நேரத்திற்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவதாகும் என, நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

13 கே. வெளிப்படுத்தின விசேஷம் 9வது அதிகாரத்தில் எழுதப்பட்ட காரியங்கள் எப்போது நிறைவேற்றப்பட வேண்டும்?ப. கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு, ஏழாவது முத்திரை உடைக்கப்பட்ட பின்பு, அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

14 கே. வெளிப்படுத்தின விசேஷம் 10வது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டதைப்போல யோவானால் புசிக்கப்பட்ட சிறு புஸ்தகத்தால் நாம் எதைப் புரிந்துகொள்ளவேண்டும்?ப. அது ஒரு ஊழியமென்றும், இஸ்ரவேல் கோத்திரங்களை கூட்டிச்சேர்க்க அவனுக்கு ஒரு நியமமென்றும், இதோ, எழுதப்பட்டதைப்போல எலியாஸ், வந்து, சகல காரியங்களையும் மறுஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்றும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

15 கே. வெளிப்படுத்தின விசேஷம் பதினோராவது அதிகாரத்திலுள்ள இரண்டு சாட்சிகளால் எது புரிந்துகொள்ளப்படவேண்டும்?ப. மறுஸ்தாபிதத்தின் சமயத்திலும், கடைசி நாட்களில் யூத தேசத்திற்காக எழுப்பப்படவிருக்கிற இரண்டு தீர்க்கதரிசிகள், மற்றும் யூதர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்ட பின் யூதர்களுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கவும், அவர்களுடைய பிதாக்களின் தேசத்தில் எருசலேம் பட்டணத்தைக் கட்டவும் எழுப்பப்படவேண்டிய இரண்டு தீர்க்கதரிசிகள் அவர்கள்.