வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 91


பாகம் 91

மார்ச் 9, 1833ல் ஒஹாயோவின், கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த நேரத்தில் பழைய ஏற்பாடு மொழிபெயர்ப்பில் தீர்க்கதரிசி ஈடுபட்டிருந்தார். தள்ளுபடியாகமம் என்றழைக்கப்பட்ட பூர்வகாலத்து எழுத்துக்களின் பகுதிக்கு வந்து கர்த்தரிடத்தில் விண்ணப்பித்து இந்த அறிவுரையைப் பெற்றார்.

1–3, ஏறக்குறைய தள்ளுபடியாகமம் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது, ஆனால் மனுஷர்களின் கைகளால் அநேக வார்த்தைகளின் உண்மையில்லாத இடைச்செருகல்கள் அடங்கியிருந்தன; 4–6, ஆவியால் தெளிவுபடுத்தப்பட்டவர்களுக்கு அது பலனளிக்கிறது.

1 தள்ளுபடியாகமத்தைக் குறித்து மெய்யாகவே இப்படியாக உங்களுக்கு கர்த்தர் சொல்லுகிறார், அவற்றில் அடங்கியிருக்கிற அநேக காரியங்கள் உண்மையானவை, ஏறக்குறைய அது சரியாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது;

2 அவற்றில் அடங்கியிருக்கிற அநேக காரியங்கள் உண்மையானவையல்ல, அவைகள் மனுஷர்களின் கைகளால் செய்யப்பட்ட வார்த்தைகளின் இடைச்செருகல்கள்.

3 தள்ளுபடியாகமம் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்பது அவசியமில்லை என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4 ஆகவே, அதைப்படிக்கிறவன் புரிந்துகொள்வானாக, ஏனெனில் சத்தியத்தை ஆவி வெளிப்படுத்துகிறது;

5 ஆவியால் தெளிவுபடுத்தப்பட்டவர்கள் அதிலிருந்து பலனடைவார்கள்;

6 ஆவியால் தெளிவு படுத்தப்படாதவர்கள் பலனடையமாட்டார்கள். ஆகவே அது மொழி பெயர்க்கப்பட வேண்டியது அவசியமில்லை. ஆமென்.