வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 40


பாகம் 40

ஜனுவரி 6, 1831ல் நியூயார்க்கின் பயெட்டியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தலைப் பதிவு செய்வதற்கு முன்னால் தீர்க்கதரிசியின் வரலாறு உரைக்கிறது, “ஜேம்ஸ் கோவெல், கர்த்தரின் வார்த்தையை மறுத்து அவரது முந்தய கொள்கைகளிடமும் மக்களிடமும் திரும்பிப் போனதால், பின்வரும் வெளிப்படுத்தலை கர்த்தர் எனக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுத்தார்” (பாகம் 39 பார்க்கவும்).

1–3, துன்புறுத்தலுக்கான பயமும், உலகத்தின் அக்கறையும், சுவிசேஷத்தை மறுக்கச் செய்கிறது.

1 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனாகிய ஜேம்ஸ் கோவெலின் இருதயம் எனக்கு முன்பாக, சரியாக இருந்தது, ஏனெனில் எனது வார்த்தைக்கு கீழ்ப்படிவதாக அவன் என்னுடன் உடன்படிக்கை செய்தான்.

2 வார்த்தையை அவன் சந்தோஷத்தோடு பெற்றுக்கொண்டான், ஆனால் நேரடியாக சாத்தான் அவனை சோதித்தான்; துன்புறுத்தலுக்கான பயமும், உலகத்தின் அக்கறையும் சுவிசேஷத்தை மறுதலிக்கச் செய்தது.

3 ஆகவே, அவன் எனது உடன்படிக்கையை மீறினான், எனக்கு நலமாகத் தோன்றுவதை அவனுக்குச் செய்வது என் பொறுப்பாயிருக்கிறது, ஆமென்.

அச்சிடவும்