Scripture Stories
லேகியும் சரயாவும் எருசலேமை விட்டு வெளியேறுதல்


“லேகியும் சரயாவும் எருசலேமை விட்டு வெளியேறுதல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

“லேகியும் சரயாவும் எருசலேமை விட்டு வெளியேறுதல்,” மார்மன் புஸ்தகக் கதைகள்

1 நேபி 1-2

லேகியும் சரயாவும் எருசலேமை விட்டு வெளியேறுதல்

குடும்பத்தை கர்த்தர் எச்சரித்தல்

படம்
கர்த்தரின் தரிசனம்

லேகியும் சரயாவும் தங்கள் குழந்தைகளுடன் எருசலேமில் வசித்து வந்தனர். லேகி கர்த்தரிடமிருந்து ஒரு தரிசனத்தை பெற்றான். ஒரு நாள் மீட்பர் உலகிற்கு வருவார் என்பதைக் கண்டான். எருசலேம் அழிக்கப்படும் என்பதையும் கர்த்தர் அவனுக்குக் காட்டினார்.

1 நேபி 1:4-18

படம்
கோபமான மக்களிடம் லேகி பேசுதல்

லேகி தன் தரிசனத்தைப் பற்றி மக்களிடம் கூறினான். உலகைக் காப்பாற்ற இயேசு கிறிஸ்து ஒரு நாள் வருவார் என்று அவர்களிடம் கூறினான்.

1 நேபி 1:18-19

படம்
அழிக்கப்பட்ட கட்டிடங்களின் தரிசனம்

எருசலேம் அழிக்கப்படும் என்பதையும் லேகி மக்களிடம் கூறினான். மனந்திரும்பும்படி அவர்களை அழைத்தான்.

1 நேபி 1:14, 18–19

படம்
கோபமான மக்கள்

மக்கள் கோபமாயிருந்தார்கள். கர்த்தர் மீண்டும் லேகியிடம் சொப்பனத்தில் பேசினார். எருசலேமில் தானும் தன் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை லேகி அறிந்தான். அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது.

1 நேபி 1:19-20; 2:1-2

படம்
நகரத்தை விட்டு குடும்பம் வெளியேறுதல்

லேகியும் சரயாவும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் குடும்பத்துடன் நகரத்தை விட்டு வெளியேறினர். லேகி மற்றும் சரயாவுக்கு லாமன், லெமுவேல், சாம் மற்றும் நேபி என்ற பெயருடைய நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் வீட்டையும் நல்ல பொருட்களையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

1 நேபி 2:3-5

படம்
குடும்பம் பயணித்தல்

குடும்பம் செங்கடலுக்கு அடுத்த வனாந்தரத்தில் பயணம் செய்தது. லேகி தனது குடும்பத்தை ஆசீர்வதித்த தேவனுக்கு நன்றி தெரிவித்தான். கர்த்தரைப் பின்பற்றவும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் அவன் தனது குடும்பத்திற்குக் கற்றுக் கொடுத்தான்.

1 நேபி 2:5-10

படம்
பாலைவனத்தில் குடும்பம்

லாமான் மற்றும் லெமுவேல் குறை கூறினர். அவர்கள் தங்கள் வீட்டையும், விட்டுச் சென்ற பொருட்கள் நிமித்தமும் மனம் வாடினர். கர்த்தர் ஏன் வெளியேறச் சொன்னார் என்று அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எருசலேம் போன்ற ஒரு பெரிய நகரம் அழிக்கப்படும் என்று அவர்கள் நம்பவில்லை.

1 நேபி 2:11-13

படம்
லாமான் மற்றும் லெமுவேல்

லாமானும் லெமுவேலும், லேகி தன் தரிசனங்களை கற்பனையில் காண்பதாக நினைத்தார்கள். அவர்களின் குடும்பம் வனாந்தரத்தில் என்றென்றுமாய் தொலைந்து போனால் என்ன செய்வது?

1 நேபி 2:11

படம்
நேபி

லேகி சொன்னது உண்மை என்பதை நேபி தானாகவே தெரிந்துகொள்ள விரும்பினான். அவன் கர்த்தரிடம் ஜெபத்தில் கேட்டான்.

1 நேபி 2:16

படம்
நேபி

தனது தந்தையின் வார்த்தைகள் உண்மை என்பதை அறிய கர்த்தர் நேபிக்கு பரிசுத்த ஆவியை அனுப்பினார். நேபி கர்த்தரை நம்பினான் மற்றும் அவன் அறிந்துகொண்டதை தனது சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டான். சாம் நேபி சொல்வதைக் கேட்டு நம்பினான், ஆனால் லாமானும் லெமுவேலும் நம்பவில்லை.

1 நேபி 2:16-18

அச்சிடவும்