“இளைய ஆல்மா”மார்மன் புஸ்தக கதைகள் (2023)
“இளைய ஆல்மா”மார்மன் புஸ்தக கதைகள்
இளைய ஆல்மா
பலத்த மாற்றம்
சாரகெம்லாவில் சபையை வழிநடத்த ஆல்மாவுக்கு மோசியா ராஜா அதிகாரம் கொடுத்தார். மக்களுக்கு மனந்திரும்பவும், கர்த்தரில் விசுவாசம் வைக்கவும் ஆல்மா போதித்தான்.
ஆல்மாவுக்கு ஒரு மகன் இருந்தான், அவனுக்கும் ஆல்மா என்று பெயரிடப்பட்டது அவனது தந்தை போதித்ததை இளைய ஆல்மா நம்பவில்லை.
கர்த்தரை நம்பாத மகன்கள் மோசியாவுக்கு இருந்தனர். அவர்கள் இளைய ஆல்மாவின் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் மக்கள் சபையை விட்டு விலகவேண்டுமென்று விரும்பினர். ஆல்மாவும் மோசியாவின் மகன்களும் தேவனின் கட்டளைகளுக்கு எதிரான காரியங்களைச் செய்ய பலரை வழிநடத்தினர்.
ஒரு நாள், கர்த்தர் அவர்களை நிறுத்த ஒரு தூதனை அனுப்பினார். சபையை அழிக்கும் முயற்சியை நிறுத்தும்படி தூதன் கூறினான். ஆல்மாவும் மோசியாவின் மகன்களும் மிகவும் பயந்து தரையில் விழுந்தனர்.
மூன்று இரவும் பகலும் ஆல்மாவால் பேசவோ நகரவோ முடியவில்லை. அவன் செய்த அனைத்து தவறான செயல்களுக்காக மிகுந்த வேதனையை உணர்ந்தான். பலரைக் கர்த்தரிடமிருந்து வெளியேற்றியதால் அவன் கவலைப்பட்டான்.
ஆல்மா தனது பாவங்களால் மிகவும் வேதனை அடைந்தான். அப்போது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி தன் தந்தை பேசியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
ஆல்மா இயேசுவிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். ஜெபித்த பின்பு, தனது வேதனைகளை அவன் நினைவு கொள்ளவில்லை. கர்த்தர் தன்னை மன்னித்துவிட்டார் என்பதை அறிந்தான். அவன் தன் பாவங்களை நினைத்து அதன் பின்பு வருத்தப்படவில்லை மாறாக, ஆல்மா மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான்.
மோசியா 27:24, 28–29; ஆல்மா 36:18–22
ஆல்மா தனது பலத்தை மீண்டும் பெற்றான். அவனும் மோசியாவின் மகன்களும் மனந்திரும்பி, அவர்கள் ஏற்படுத்திய அனைத்து வேதனைகளையும் சரிசெய்ய முடிவு செய்தனர். அன்றிலிருந்து பிறர் மனந்திரும்ப உதவி செய்து கர்த்தருக்குச் சேவை செய்தனர். அவர்கள் மோசியா ஆட்சி செய்த தேசத்தில் பயணம் செய்து மக்களுக்கு இயேசுவைப் பற்றி போதித்தார்கள்.
மோசியா 27:20–24, 32–37; ஆல்மா 36:23–26
ஆல்மாவும் மோசியாவின் மகன்களும் இயேசுவின் போதனைகள் தங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்பினர். கர்த்தருக்கும் மக்களுக்கும் சேவை செய்ய மிகவும் கடினமாக உழைத்தார்கள். மோசியாவின் மகன்கள் அங்கிருந்து வெளியேறி லாமனியர்களுக்கு இயேசுவைப் பற்றி போதிக்க முடிவெடுத்தனர். ஆல்மா அங்கேயே தங்கியிருந்து நேபியர்களுக்கு தொடர்ந்து போதிக்க முடிவு செய்தான்.