“மார்மன் புஸ்தகத்தைப் பற்றி,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
மார்மன் புஸ்தகத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்துவும் அமெரிக்காவில் அவரின் மக்களும்
மார்மன் புஸ்தகம் வேதப் புஸ்தகம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நீண்ட காலத்திற்கு முன்பு அவர் அமெரிக்காவிற்கு சென்றதையும் இது நமக்குப் போதிக்கிறது. மார்மன் புஸ்தகத்திலிருந்து, இயேசுவின் சுவிசேஷத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இப்போது எப்படி சமாதானமாக இருக்க வேண்டும் என்பதையும், தேவன் மற்றும் இயேசுவோடு என்றாவது ஒரு நாள் மீண்டும் எப்படி வாழலாம் என்பதையும் இது நமக்குக் கற்பிக்கிறது.
மார்மன் புஸ்தக தலைப்புப் பக்கம்; மார்மன் புஸ்தகத்தின் முன்னுரை ;3 நேபி 11
மார்மன் புஸ்தகம் கர்த்தரின் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது. அவர்கள் தகடுகள் எனப்படும் உலோகத்தலான பக்கங்களில் எழுதினர். அவர்களுடைய கதைகளும் சாட்சிகளும் இயேசுவில் விசுவாசம் வைக்க நமக்கு உதவுகின்றன. அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த பல குழுக்களைப் பற்றி எழுதினார்கள்.
மார்மன் புஸ்தக தலைப்புப் பக்கம்; மார்மன் புஸ்தகத்தின் முன்னுரை
இயேசு பிறப்பதற்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு கூட்டத்தினர் வந்தார்கள். அவர்கள் லாமானியர்கள் மற்றும் நேபியர்கள் என்று இரண்டு தேசங்களாக பிரிந்தனர்.
மார்மன் புஸ்தக முன்னுரை மற்றும் 1 நேபி 1:4
அதற்கும் முன்னதாக, மற்றொரு கூட்டத்தினர் பாபேல் கோபுரத்திலிருந்து அமெரிக்காவிற்கு வந்தது. அவர்கள் யாரேதியர் என்று அழைக்கப்பட்டனர்.
மார்மன் புஸ்தக முன்னுரை மற்றும் ஏத்தேர் 1:33-43
தேவனின் தீர்க்கதரிசிகள் மக்களுக்கு போதித்தார்கள். மக்கள், செவிகொடுத்து, தேவனின் கட்டளைகளைக் கைக்கொண்டபோது அவர் அவர்களுக்கு உதவினார். தீர்க்கதரிசிகள் இயேசுவைப் பற்றி போதித்தார்கள், அவர் எருசலேமில் பிறப்பார் என்று சொன்னார்கள். இயேசு தம்முடைய மரணத்திற்குப் பிறகு தங்களைச் சந்திப்பார் என்பதை நேபியர்களும் லாமானியர்களும் அறிந்து கொண்டனர்.
2 நேபி 1:20; 25:12–14; 26:1,3,9; மோசியா 3:5-11; ஆல்மா 7:9–13; ஏலமன் 3
தீர்க்கதரிசிகள் சொன்னபடியே இயேசு வந்தார். இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகு, மக்களைச் சந்தித்தார். ஒவ்வொரு நபரும் தனது கைகளிலும் கால்களிலும் உள்ள ஆணிகளின் தழும்புகளை உணர அனுமதித்தார். அவர் தேவனுடைய குமாரன் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் தமது சுவிசேஷத்தைப் போதித்தார், மக்கள் அதை எழுதி வைத்தனர். அவர்கள் பல ஆண்டுகளாக இயேசுவின் வருகையைப் பற்றி பேசினர்.
3 நேபி 11:7-15,31-41; 16:4; 4 நேபி 1:1-6,13-22
இயேசுவின் வருகைக்கு சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மார்மன் என்ற ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்து வந்தான். மார்மன் வாழ்ந்த கால கட்டத்தில், மக்கள் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். தனக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் எழுதியவைகளை மார்மன் வைத்திருந்தான். அவர்களின் பல எழுத்துக்களைச் சேர்த்து ஒரே தகடுகளில் தொகுத்தான். இந்த எழுத்துக்கள் மார்மன் புஸ்தகமானது.
மார்மன் புஸ்தக முன்னுரை மார்மனின் வார்த்தைகள் 1:2– 9 ; மார்மன் 1:2–4, 13–17
மார்மன் மரிப்பதற்கு முன்பு, தனது மகன் மரோனிக்கு தகடுகளைக் கொடுத்தான். மரோனி வாழ்ந்த காலத்தில், மக்கள் மிகவும் மோசமான காரியங்களைச் செய்து கொண்டிருந்தனர். இயேசுவை விசுவாசிக்கிற யாவரையும் கொல்ல நினைத்தார்கள். மரோனி வருங்காலத்து மக்களுக்கு உதவ விரும்பினான், எனவே அவனும் தகடுகளில் கூடுதலாக எழுதி பாதுகாப்பாக வைக்க அவைகளைப் புதைத்தான்.
மார்மன் புஸ்தக முன்னுரை மார்மனின் வார்த்தைகள் 1:1– 2 ; மார்மன் 8:1–4, 14–16; மரோனி 1
பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1823 இல், மரோனி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திற்கு ஒரு தூதனாக வெளிப்படுத்தினான். மரோனி ஜோசப்பிடம் தகடுகள் எங்கே இருக்கிறது என்று கூறினான். தேவனின் உதவியுடன், ஜோசப் தகடுகளின் எழுத்தை மொழிபெயர்த்தார்.
மார்மன் புஸ்தக முன்னுரைஜோசப் ஸ்மித்—வரலாறு 1
சில காரியங்கள் உண்மை என்பதை அறிய நமக்குதவ தேவன் பரிசுத்த ஆவியை அனுப்புகிறார். நீங்கள் மார்மன் புஸ்தகத்தை வாசிக்கும்போது, அவைகள் உண்மையா என நீங்கள் ஜெபித்து தேவனிடம் கேட்கலாம். அவ்வாறே, இயேசு உங்கள் இரட்சகர் என்பதையும் அவர் உங்களை நேசிக்கிறார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.