Scripture Stories
வனாந்திரத்தில் பெண்கள்


“வனாந்திரத்தில் பெண்கள்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

1 நேபி 16-17

வனாந்திரத்தில் பெண்கள்

கர்த்தரோடு இணைந்து நடத்தல்

படம்
வேலை செய்யும் பெண்கள்

இஸ்மவேலின் மகள்கள் தங்கள் குடும்பத்துடன் வனாந்தரத்தில் பயணம் செய்தனர். பயணம் கடினமாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, அவர்கள் லேகி,சரயாவின் மகன்களை மணந்தனர்.

1 நேபி 16:7; 17:1

படம்
இஸ்மவேலின் கல்லறைக்கு அருகில் மகள்கள் சோகமாக இருத்தல்

ஒரு நாள், இஸ்மவேல் மரித்தான். அவனது மகள்கள் மிகவும் சோகமாக இருந்தனர். அவர்கள் தங்கள் தந்தையை இழந்து வாடினர் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வனாந்தரத்தில் இறந்துவிடுவோம் என்று மகள்கள் கவலைப்பட்டனர் அவர்கள் லேகி மற்றும் நேபியைக் குறித்து எரிச்சலடைந்தனர், மேலும் அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினர்.

1 நேபி 16:34-36

படம்
சகோதரிகள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுதல்

கர்த்தருடைய குரல் இஸ்மவேலின் மகள்களிடமும் அவர்களுடைய குடும்பங்களிடமும் பேசியது. அவர்கள் மனந்திரும்பினார்கள், கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார்.

1 நேபி 16:39.

படம்
சிறு குழந்தைகளுடன் சரயா

பெண்கள் வனாந்தரத்தில் குழந்தைகளைப் பெற்றனர். சரயா, யாக்கோபு மற்றும் யோசேப்பு என்ற மற்ற இரண்டு மகன்களையும் பெற்றாள்.

1 நேபி 17:1; 18:7

படம்
குடும்பம் பயணித்தல்

பெண்களின் பயணத்தில் கர்த்தர் உதவினார். அவர்களுடைய குழந்தைகளுக்கு நிறைய பால் கொடுத்து ஆசீர்வதித்தார். பெண்கள் பயணத்தின் போது பலம் பெற உதவினார்.

1 நேபி 17:1-3

படம்
கூடாரத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள்

மகள்களையும் அவர்களது குடும்பங்களையும் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கர்த்தர் கூறினார். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்வார்களெனக் கர்த்தர் அந்தக் குடும்பங்களுக்கு வாக்குக் கொடுத்தார். அவர்கள் வேட்டையாடிய உணவை நன்மையாக உண்ண வழி செய்தார், அவர் அவர்களை வழிநடத்தினார்.

1 நேபி 17:3, 5, 12-14

படம்
கடற்கரையில் குடும்பங்கள்

எட்டு வருடங்கள் வனாந்தரத்தில் வசித்த குடும்பங்கள் கடலை அடைந்தனர். பெண்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாயிருந்தனர் கடலை ஒட்டிய நிலம் அழகாக இருந்தது. உண்பதற்குப் பழமும் தேனும் நிறைந்திருந்ததால் அதை உதாரத்துவஸ்தலம் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தியிருந்தார்.

1 நேபி 17:4-6

அச்சிடவும்