வேதக் கதைகள்
இயேசு மக்களுக்குப் போதித்தல்


“இயேசு மக்களுக்குப் போதித்தல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

3 நேபி 11–27; 4 நேபி 1

இயேசு மக்களுக்குப் போதித்தல்

அவருடைய சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுதல்

இயேசு கிறிஸ்து முழங்காற்படியிட்டு மகிழ்ச்சியான பிள்ளைகளிடம் பேசுதல், அநேக மகிழ்ச்சியான மக்கள் அவர்களைச் சுற்றி முழங்காற்படியிட்டு கேட்டல்

அமெரிக்க மக்கள் இயேசு கிறிஸ்துவைக் கண்டும் அவர் போதிப்பதைக் கேட்டும் மகிழ்ச்சியடைந்தனர். இரட்சகரின் வருகைக்காக அவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தார்கள்.

3 நேபி 11:10, 17

இயேசு கிறிஸ்து மகிழ்ச்சியான மக்கள் மத்தியில் நின்று அவர்களுக்குப் போதித்தல்

எருசலேமுக்கு அருகிலிருந்த ஜனங்களுக்கு இயேசு போதித்த அதே பல காரியங்களை அவர்களுக்கும் போதித்தார். விசுவாசம் வைக்கவும், மனந்திரும்பவும், ஞானஸ்நானம் பெறவும் அவர் அவர்களுக்குக் போதித்தார். மக்கள் இந்தக் காரியங்களைச் செய்தால், தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். எப்படி ஜெபிக்க வேண்டும் என்று இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் மற்றவர்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

3 நேபி 11:31–39; 12:22–24, 44; 13:5–14; 17:8; 18:15–24

இயேசு கிறிஸ்து புன்னகைத்தல்

அவர் அவர்களுக்குப் போதித்ததை அவர்கள் புரிந்துகொள்ள உதவும்படி வீட்டிற்குச் சென்று தேவனிடம் ஜெபிக்குமாறு இயேசு மக்களிடம் கூறினார். அவர் மறுநாள் வருவதாகச் சொன்னார்.

3 நேபி 17:1–3

மக்கள் நெருப்பைச் சுற்றி அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசுதல்

அன்றிரவு, இயேசுவைப் பார்த்ததாக அந்த மக்கள் மற்றவர்களிடம் கூறினார்கள். அவர் சொன்னதையும் செய்ததையும் பற்றி அவர்கள் பேசினார்கள். இயேசுவைப் பார்ப்பதற்காக அநேக மக்கள் இரவு முழுவதும் பயணம் செய்தார்கள்.

3 நேபி 19:1–3

சீஷர்கள் பெரிய மக்கள் குழுக்களுக்குப் போதித்தல்

அடுத்த நாள், மக்கள் இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களுடன் கூடிவந்தனர். இயேசு போதித்த எல்லாவற்றையும் சீஷர்கள் மக்களுக்குப் போதித்தார்கள். அவர்கள் தரையில் முழங்காற்படியிட்டு ஜெபித்தார்கள்.

3 நேபி 19:4–8

இயேசு கிறிஸ்து முழங்காற்படியிட்டு ஜெபித்தல், மற்ற மக்களும் அவரைச் சுற்றி முழங்காற்படியிட்டு ஜெபித்தல்

அப்போது இயேசு வந்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஜெபித்தார். சீஷர்களும் ஜெபித்தனர். அவர்கள் இரட்சகரைப் போல பிரகாசிக்கத் தொடங்கினர். இயேசு மகிழ்ச்சியாய் இருந்தார். அவர் மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக சீஷர்கள் தூய்மையானார்கள். இயேசு மறுபடியும் ஜெபித்தார், ஆச்சரியமான விஷயங்களை அவர் சொன்னதை மக்கள் கேட்டார்கள்.

3 நேபி 19:15–36

ஒரு மகிழ்ச்சியான குழந்தை ஒருவரை இயேசு கிறிஸ்துவுக்கு செவிகொடுக்கும் மக்களுடன் சேர அழைத்தல்

அடுத்த சில நாட்களுக்கு, பரலோக பிதாவின் திட்டத்தைப் பற்றிய பல காரியங்களை இயேசு மக்களுக்குப் போதித்தார். அவர்களுடன் திருவிருந்தையும் பகிர்ந்து கொண்டார். தேசத்திலிருந்த மக்கள் எல்லாரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றார்கள்.

3 நேபி 20–27; 4 நேபி 1:1–2

மக்கள் ஒருவருக்கொருவர் இயேசு கிறிஸ்துவிடம் வர உதவுதல், இயேசு கிறிஸ்து அவர்களிடம் பேசி புன்னகைத்தல்

மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, தங்களிடம் இருந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களைச் செய்யும்படி இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்தார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சபையார் என்று அழைக்கப்பட்டனர். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் மக்களைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

3 நேபி 26:17–21; 27:30–31; 4 நேபி 1:3–18