“நேபியும் பித்தளைத் தகடுகளும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
நேபியும் பித்தளைத் தகடுகளும்
பரிசுத்த ஆவியைப் பின்பற்றக் கற்றுக்கொள்ளுதல்
லாமான், லெமுவேல், சாம், நேபி இரவில் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். நேபி லாபானின் வீட்டிற்குச் சென்றான், அவனுடைய சகோதரர்கள் நகரத்திற்கு வெளியே ஒளிந்திருந்தார்கள்.
நேபி ஆவியானவர் வழிநடத்த அனுமதித்தல். அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவன் அறிந்திருக்கவில்லை, ஆனால் பித்தளைத் தகடுகளைப் பெற கர்த்தர் உதவுவார் என்று அவனுக்குத் தெரியும்.
லாபானின் வீட்டிற்கு அருகில் நேபி வந்தபோது, லாபான் பூமியில் விழுந்து இருப்பதைக் கண்டான். லாபான் குடித்து வெறித்தவனாயிருந்தான். நேபி லாபானின்பட்டயத்தைக் கண்டு அதை எடுத்தான்.
நேபி பட்டயத்தைப் பார்த்தபோது, பரிசுத்த ஆவியானவர் லாபானைக் கொல்லச் சொன்னார். ஆனால் நேபி அவனைக் கொல்ல விரும்பவில்லை. நேபியின் குடும்பத்தாரிடம் வேதம் இல்லாமலிருப்பதை விட லாபான் இறப்பது நல்லது என்று ஆவியானவர் நேபியிடம் கூறினார். பித்தளைத் தகடுகளில் எழுதப்பட்ட கர்த்தரின் கட்டளைகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன.
லாபான் தன்னைக் கொல்ல முயன்றதை நெபி அறிந்திருந்தான். லாபான் அவர்களுடைய உடைமைகளையும் திருடினான், மேலுமாக கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
லாபானைக் கொல்லும்படி ஆவியானவர் மீண்டும் நேபியிடம் சொன்னார். பித்தளை தகடுகளைப் பெறுவதற்கு கர்த்தர் ஒரு வழியை தயார் செய்திருப்பதை நேபி அறிந்திருந்தான் ஆவியானவருக்குக் கீழ்ப்படிவதை அவன் தேர்ந்தெடுத்தான். நேபி லாபானைக் கொன்று, லாபானின் ஆடைகளை அணிந்தான்.
நேபி லாபானின் பொக்கிஷ அறைக்குள் சென்று லாபானின் வேலைக்காரன் சோரமைச் சந்தித்தான். நேபி லாபானைப் போலவே நடந்து கொண்டும் அவனைப் போலவும் பேசினான்.
தனக்கு பித்தளை தகடுகள் தேவை என்று சோரமிடம் நேபி கூறினான். பின்னர் நேபி சோராமை தன்னுடன் வரும்படி கூறினான். சோராம் நேபியை லாபான் என்று நினைத்தான், அதனால் அவன் நேபி விரும்பியதைச் செய்தான்.
நேபியும் சோரமும் நகரத்திலிருந்து வெளியே வந்தபோது, லாமான், லெமுவேல், சாம் ஆகியோர் நேபியை லாபான் என்று நினைத்தார்கள். அவர்கள் பயந்து ஓட ஆரம்பித்தனர்.
நேபி தனது சகோதரர்களை அழைத்தான். அவன் நேபி என்று தெரிந்ததும் அவர்கள் ஓடுவதை நிறுத்தினார்கள். ஆனால் சோரம் பயந்து எருசலேமுக்குத் திரும்ப முயன்றான்.
நேபி சோரமை தடுத்து நிறுத்துதல். தகடுகளைப் பெற்றுக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டதாக அவன் சோரமிடம் கூறினான். வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு அவர்களுடன் வரும்படி அவன் சோரமை அழைத்தான். அவன் வேலைக்காரராக இல்லாமல், ஒரு சுதந்திர மனிதராக இருக்க முடியும் என்பதை சோரம் அறிந்து கொண்டான், மற்றும் நேபி மற்றும் அவனது குடும்பத்தினருடன் வருவதாக உறுதியளித்தான்.
அவர்கள் லேகி மற்றும் சரயாவிடம் திரும்பிச் சென்றனர். லேகியும் சரயாவும் தங்கள் மகன்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தன் மகன்கள் இறந்துவிட்டதாக சரயா நினைத்திருந்தாள். கர்த்தர் தன் மகன்களைப் பாதுகாப்பாக வைத்திருந்ததால், அவர்களுடைய குடும்பம் எருசலேமை விட்டு வெளியேறும்படி கட்டளையிடப்பட்டிருப்பதை அவள் தற்போது நம்பினாள். லேகி மற்றும் சரயாவின் குடும்பத்தினர் கர்த்தருக்கு நன்றி செலுத்த பலிகளைச் செலுத்தினார்கள்.
லேகி பித்தளைத் தகடுகளை வாசித்தான். அந்தத் தகடுகளில் தீர்க்கதரிசிகளின் போதனைகள் இருப்பதைக் கண்டான். அவனுடைய மூதாதையர்களில் ஒருவர் யோசேப்பு என்றும், அவன் தனது சகோதரர்களால் நீண்ட காலத்திற்கு முன்பு எகிப்துக்கு விற்கப்பட்டான் என்றும் அவன் கண்டான். பித்தளைத் தகடுகள் மிகவும் முக்கியமானவை என்று லேகி அறிந்திருந்தான். அவனுடைய குடும்பம் கட்டளைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை அவன் கண்டான்.