வேதக் கதைகள்
மார்மன் தண்ணீர்களில் ஆல்மா


“மார்மன் தண்ணீர்களில் ஆல்மா,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

மோசியா 18; 23

மார்மன் தண்ணீர்களில் ஆல்மா

தேவனின் ஜனம் ஆகுதல்

ஆல்மா தண்ணீரைப் பார்த்தல்

ஆல்மா நோவா என்ற இராஜாவுக்கு ஆசாரியனாக இருந்தான். நோவாவால் கொல்லப்படும் தேவனின் தீர்க்கதரிசியான அபிநாதியைக் காப்பாற்ற ஆல்மா முயன்றான். ஆனால் நோவா ஆல்மா மீது கோபமடைந்து ஆல்மாவையும் கொல்ல விரும்பினான். பாதுகாப்பாக இருக்க ஆல்மா நோவாவிடம் இருந்து தப்பி ஓடிவிட்டான். பகலில், ஆல்மா மார்மன் தண்ணீர்கள் என்ற இடத்திற்கு அருகில் ஒளிந்து கொண்டான்.

மோசியா 17:2–4; 18:4–5, 8

தண்ணீர் அருகில் ஆல்மா மண்டியிட்டு  ஜெபித்தல்

இயேசு கிறிஸ்துவைப்பற்றி அபிநாதி போதித்ததை ஆல்மா நம்பினான். தன் பாவங்களையும் தவறுகளையும் மன்னிக்கும்படி அவன் தேவனிடம் வேண்டினான்.

மோசியா 18:1–2

இரவில் நகரத்தில் ஆல்மா

ஆல்மா தனிமையில் மக்களைச் சந்தித்து இயேசுவைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தான். கேட்கும் அனைவருக்கும் அவன் கற்பித்தான்.

மோசியா 18:1–3

தண்ணீர் அருகில் ஆல்மா கற்பிப்பதை மக்கள் கேட்டல்

பலர் ஆல்மாவை நம்பினர். ஆல்மா கற்பிப்பதைக் கேட்க அவர்கள் மார்மன் தண்ணீர் அருகில் சென்றனர்.

மோசியா 18:3–8, 31

ஆல்மா தண்ணீருக்கு அருகில் அமர்ந்து கற்பித்தல்

விசுவாசிகள் தேவனின் மக்கள் என்று அழைக்கப்படவும், மற்றவர்களுக்கு உதவவும், தேவனைப் பற்றி மக்களுக்குச் சொல்லவும் விரும்பினர். எனவே அவர்களை ஞானஸ்நானம் பெற ஆல்மா அழைத்தான். ஞானஸ்நானம் பெறுவதன் மூலம், அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதற்கும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அவருடன் ஒரு உடன்படிக்கையை அல்லது வாக்குறுதியை செய்வார்கள். பதிலுக்கு, தேவன் தம் ஆவியால் அவர்களை ஆசீர்வதிப்பார்.

மோசியா 18:8–10, 13

ஆல்மா ஒரு பெண்ணுக்கு தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுத்தல்

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் கைகளைத்தட்டி ஞானஸ்நானம் பெற விரும்புவதாகச் சொன்னார்கள். ஆல்மா அவர்கள் ஒவ்வொருவருக்கும் மார்மன் தண்ணீர்களில் ஞானஸ்நானம் கொடுத்தான். அவர்கள் அனைவரும் தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டனர் மற்றும் அவர்கள் மீது தேவனின் அன்பை உணர்ந்தனர். அவர்கள் கிறிஸ்துவின் சபையின் உறுப்பினர்களாக ஆனார்கள்.

மோசியா 18:11–17, 30.

நோவா ராஜா கோபமடைந்து சுட்டிக்காட்டுதல்

நோவா தனது மக்களில் சிலர் தனது நாட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டான். அவர்களைக் கண்காணிக்க வேலைக்காரர்களை அனுப்பினான். ஆல்மாவின் போதனைகளைக் கேட்பதற்காக மக்கள் மார்மன் தேசத்திற்குச் செல்வதை வேலைக்காரர்கள் பார்த்தார்கள். நோவா மிகவும் கோபமடைந்தான். ஆல்மாவையும் மற்றும் அவன் கற்பித்துக் கொண்டிருந்த மக்களையும் கொல்ல அவன் தனது படையை அனுப்பினான்.

மோசியா 18:31–33

ஆல்மாவும் அவனது மக்களும் பயணித்தல்

ராணுவத்தைப்பற்றி தேவன் ஆல்மாவை எச்சரித்தார். தேவனின் உதவியுடன், ஆல்மாவும் அவனுடைய மக்களும் பாதுகாப்பாக தேசத்தை விட்டு வெளியேறினர். அவர்களை ராணுவத்தால் பிடிக்க முடியவில்லை. அவர்கள் எட்டு நாட்கள் வனாந்தரத்தில் நடந்து ஒரு அழகான தேசத்திற்கு வந்தார்கள். அங்கே புதிய வீடுகளை உருவாக்கினார்கள். ஆல்மா மக்களுக்குக் கற்பித்தான், அவர்கள் தேவனுக்கு அளித்த வாக்குறுதியைக் காத்துக் கொண்டனர்.

மோசியா 18:34–35; 23:1–20