“சரயா,” மார்மன் புஸ்தக கதைகள்
“சரயா,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
சரயா
ஒரு பெண்ணின் விசுவாசப் பயணம்
சரயா தனது குடும்பத்துடன் எருசலேமில் வசித்து வந்தாள். அவளது கணவன், லேகி, கர்த்தரின் தீர்க்கதரிசி. ஒரு நாள், கர்த்தர் லேகியை தன் குடும்பத்துடன் எருசலேமை விட்டு வெளியேறுமாறு கூறினார்.
சரயாவுக்கு கர்த்தர் மீது விசுவாசம் இருந்தது. அவளும் அவளுடைய குடும்பமும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் தங்களுடைய பொன்னையும் வெள்ளியையும் விட்டு லேகியோடு வனாந்தரத்திற்கு சென்றார்கள்.
சரயாவும் லேகியும் தங்களுக்குத் தேவையான உணவையும் மற்ற பொருட்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் பல நாட்கள் பயணம் செய்த பிறகு, வனாந்தரத்தில் தங்குவதற்கு கூடாரங்களை அமைத்தனர். பின்னர் அவர்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தர் செய்த உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஒரு நாள் கர்த்தர் சரயாவையும் லேகியின் மகன்களையும் எருசலேமுக்குச் சென்று பித்தளைத் தகடுகளை கொண்டுவர கூறினார். தன் மகன்கள் திரும்பி வராததால் சரயா அச்சமடைந்தாள். அவர்கள் மரித்துவிட்டதாக அவள் நினைத்தாள். லேகி சரயாவுக்கு ஆறுதல் கூறினான். கர்த்தர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
தன் மகன்கள் எருசலேமிலிருந்து திரும்பி வந்தபோது சரயா மகிழ்ச்சியில் நிறைந்தாள். கர்த்தர் அவர்களைப் பாதுகாத்தார் என்பதை இப்போது அவள் அறிந்துகொண்டாள். கர்த்தர் கேட்பதைச் செய்ய அவர்களுக்கு வல்லமை கொடுப்பார் என்று அவள் நம்பினாள். சரயாவின் முழு குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர்கள் கர்த்தருக்கு நன்றி தெரிவித்தனர்.