Scripture Stories
நேபிய பணிப்பெண்


“நேபிய பணிப்பெண்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

ஆல்மா 50

நேபிய பணிப்பெண்

அவளுடைய மக்களைப் பாதுகாக்க உதவுதல்

படம்
மோரியாந்தன் தீவட்டி பிடித்து கூட்டத்தினருடன் பேசுதல், அருகில் பணிப்பெண்

ஒரு பணிப்பெண் மோரியாந்தன் என்ற நேபிய தலைவனிடம் வேலை செய்தாள். மோரியாந்தன் மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தினான். அவன் நேபிய குழுவைத் தாக்கி அவர்களின் தேசத்தை கைப்பற்ற முயன்றான். பின்னர் அவன் தனது மக்களுடன் வடக்கு நோக்கி சென்று அங்கு தேசத்தை பிடிக்க திட்டமிட்டான்.

ஆல்மா 50:25–30

படம்
பணிப்பெண் இரவில் மோரியாந்தனிடமிருந்து ஓடுதல்

ஒரு நாள், பணிப்பெண் மீது மோரியாந்தன் கோபமடைந்தான். அவன் அவளை மிகவும் மோசமாக நடத்தினான் மற்றும் அவளை காயப்படுத்தினான். பணிப்பெண் தப்பித்து தலைவன் மரோனியின் முகாமுக்கு ஓடினாள். மோரியாந்தன் செய்த மோசமான விஷயங்களைப் பற்றி அவள் மரோனியிடம் சொன்னாள். மரோனி அவளை நம்பினான்.

ஆல்மா 50:30–31

படம்
பணிப்பெண் வரைபடத்தை சுட்டிக்காட்டி தலைவன் மரோனியிடம் பேசுதல்

மோரியாந்தன் வெளியேறி வடக்கிலுள்ள தேசத்தைக் கைப்பற்ற விரும்புவதாகவும் பணிப்பெண் கூறினாள். மரோனி கவலைப்பட்டான். மோரியாந்தன் வடக்கில் தேசத்தை கையகப்படுத்தினால், நேபியர்கள் ஆபத்தில் இருக்கக்கூடும். மக்கள் சுதந்திரத்தை இழக்க நேரிடும்.

ஆல்மா 50:31–32

படம்
வேலைக்காரி மரோனியையும் இராணுவத்தையும் பார்க்கிறாள்

மரோனி மோரியாந்தனைத் தடுக்க ஒரு இராணுவத்தை அனுப்பினான். மோரியந்தனின் மக்கள் இராணுவத்துடன் போரிட்டு தோற்றனர் அவர்கள் சமாதானமாக இருப்போம் என்று உறுதியளித்து தங்கள் தேசத்திற்குத் திரும்பினர். பணிப்பெண் மரோனியை எச்சரித்ததால், நேபிய நகரங்கள் பாதுகாப்பாக இருந்தன.

ஆல்மா 50:33, 35–36

அச்சிடவும்