“கடலில் ஒரு புயல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
“கடலில் ஒரு புயல்,” மார்மன் புஸ்தகக் கதைகள்
கடலில் ஒரு புயல்
கர்த்தரிடம் சமாதானத்தைக் கண்டறிதல்
கப்பலில் ஏறுவதற்கான நேரம் இது என்று கர்த்தர் லேகியிடம் கூறினார். பயணம் செய்யும் போது சாப்பிட நிறைய உணவுகளை குடும்பங்கள் கட்டி வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கப்பலில் ஏறி வாக்குத்தத்ததின் தேசத்தை நோக்கிப் பயணம் செய்தனர்.
கடலில் பல நாட்களுக்குப் பிறகு, சிலர் அவமரியாதையாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளத் தொடங்கினர். கர்த்தர் தங்களுக்கு உதவி செய்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
அவர்கள் கர்த்தரை வருத்தமடைய வைப்பார்கள் என்று நேபி கவலைப்பட்டான். கர்த்தரின் உதவியில்லையெனில் அவர்களின் கப்பல் பாதுகாப்பாக இருக்காது. நேபி தனது சகோதரர்களை நிறுத்தச் சொன்னான்.
லாமானும் லெமுவேலும் நேபி மீது கோபப்பட்டனர். அவர்கள் அவனைக் கட்டிப்போட்டார்கள் மேலும் அவனை மோசமாக நடத்தினர். அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை, லியஹோனா வேலை செய்வதை நிறுத்தியது. உடனடியாக ஒரு பெரிய புயல் வந்தது. மூன்று நாள் புயலுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் மூழ்கிவிடுவோம் என்று பயந்தார்கள்.
நேபியின் குடும்பத்தார் லாமானிடமும் லெமுவேலிடமும் நேபியின் கட்டை அவிழ்க்குமாறு கெஞ்சினார்கள். ஆனாலும் லாமானும் லெமுவேலும் யாரையும் நேபியின் கட்டை அவிழ்க்க விடவில்லை. சரயாவும் லேகியும் கவலையடைந்து மிகவும் நோய்வாய்ப்பட்டனர். புயல் நிற்கவில்லை
நான்காம் நாளில், கப்பல் மூழ்கப் போவதை லாமானும் லெமுவேலும் அறிந்தனர். மனந்திரும்பி நேபியின் கட்டை அவிழ்த்தார்கள். நேபி ஜெபித்தபோது, புயல் நின்றது. லியஹோனா மீண்டும் வேலை செய்யத் துவங்கியது. கப்பலை சரியான திசையில் செலுத்த நேபி அதைப் பயன்படுத்தினான்.
பல நாட்களுக்குப் பிறகு, அந்தக் குடும்பங்கள் வாக்குத்தத்ததின் தேசத்திற்கு சென்றன.