“ஆல்மா, அமுலேக்,மற்றும் சீஸ்ரம்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
ஆல்மா, அமுலேக்,மற்றும் சீஸ்ரம்
தேவனில் விசுவாசிப்பதையும் கீழ்ப்படிவதையும் தெரிவுசெய்தல்
பல சபை உறுப்பினர்கள் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை ஆல்மா கண்டான். ஆகவே, ஆல்மா நகரம் நகரமாகச் சென்று தேவனுடைய வார்த்தையைப் போதித்தான். மக்களில் பலர் மனந்திரும்பினர். பின்பு ஆல்மா அம்மோனிகா என்ற பட்டணத்திற்கு வந்தான். அங்கிருந்த மக்கள் அவனுக்கு செவிசாய்க்க வில்லை. அவன் மீது எச்சில் துப்பி ஊருக்கு வெளியே துரத்தினார்கள்.
நகரத்தை விட்டு வெளியேறும்போது ஆல்மா கவலையோடு இருந்தான். அவன் மக்களைப் பற்றி கவலைப்பட்டான். பின்பு, ஒரு தூதன் அவனிடத்தில் வந்தான். ஆல்மா தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் மகிழ்ச்சியைப் பெற முடியுமென தூதன் கூறினான். நகருக்கு திரும்பிச் சென்று மக்களை எச்சரிக்கும்படி தூதன் ஆல்மாவிடம் கூறினான். மனந்திரும்பவில்லை என்றால், அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஆல்மா விரைவாகத் திரும்பிச் சென்றான்.
ஆல்மா நகரத்திற்கு வந்தபோது, மிகுந்த பசியுடன் இருந்தான் அநேக நாட்கள் பட்டினியாய் இருந்திருந்தான். அமுலேக் என்ற மனுசனிடம் ஆல்மா உணவு கேட்டான்.
அமுலேக் தான் பார்த்த ஒரு தரிசனத்தை ஆல்மாவிடம் கூறினான். தரிசனத்தில், ஒரு தூதன் அமுலேக்கிடம் ஆல்மா தேவனின் தீர்க்கதரிசி என்று கூறினான். ஆல்மாவுக்கு உதவ அமுலேக் விரும்பினான்.
ஆல்மாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பிட உணவு கொடுத்தான் அமுலேக். பல நாட்கள் ஆல்மா, அமுலேக்கின் வீட்டில் தங்கியிருந்தான். தேவன் அமுலேக் மற்றும் அவனது குடும்பத்தை ஆசீர்வதித்தார். அதன் பின்பு தேவன், ஆல்மா மற்றும் அமுலேக்கிடம் நகரத்தில் உள்ள மக்களிடம் மனந்திரும்ப சொல்லுமாறு கூறினார். ஆல்மாவும் அமுலேக்கும் கீழ்ப்படிந்தனர். அவர்கள் போதிப்பதற்கு உதவியாக தேவன் தம்முடைய வல்லமையைக் கொடுத்தார்.
அவர்கள் போதித்ததைக் கேட்டவர்களில் ஒருவனின் பெயர் சீஸ்ரம். அவன் மிகவும் புத்திசாலியானதால் ஆல்மா மற்றும் அமுலேக்கை ஏமாற்ற விரும்பினான். தேவன் உண்மையானவர் அல்ல என்று சொன்னால், நிறைய பணம் தருவதாக அமுலேக்கிடம் சீஸ்ரம் கூறினான். அமுலேக்கும் ஆல்மாவும் போதித்ததை மக்கள் நம்பக்கூடாது என்பதற்காக அமுலேக்கை பொய் சொல்ல தூண்டினான்.
ஆல்மா 10:29-32; 11:21–25; 12:4–6
ஆனால் அமுலேக் தேவனைப் பற்றி பொய் சொல்ல மாட்டான். தேவன் உண்மையானவர் என்றான். அமுலேக்கும் ஆல்மாவும் சீஸ்ரமின் எண்ணங்களை அறிந்தனர். சீஸ்ரம் ஆச்சரியமடைந்து அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டான். எல்லா மக்களுக்கும் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்று சீஸ்ரமுக்கு அவர்கள் போதித்தார்கள். தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஆல்மா மற்றும் அமுலேக் போதித்ததை சீஸ்ரம் நம்பினான்.
ஆல்மா 11:23–46; 12:1–18, 24–34; 14:6–7; 15:6–7
சீஸ்ரம் தான் செய்த மோசமான காரியங்களுக்காக மிகவும் வருந்தினான். அவன் நோய்வாய்ப்பட்டான். ஆல்மாவும் அமுலேக்கும் அவனைச் சந்தித்தனர் இயேசுவின் மீதான சீஸ்ரமின் விசுவாசத்தினிமித்தம் அவன் குணமடைய முடியும் என்று ஆல்மா கூறினான். அவனைக் குணப்படுத்துமாறு ஆல்மா தேவனிடம் வேண்டினான் சீஸ்ரம் குதித்தெழுந்தான். அவன் குணமடைந்தான்! அவன் ஞானஸ்நானம் பெற்று அவனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்குப் போதித்தான்.