வேதக் கதைகள்
மார்மன் தீர்க்கதரிசி


“மார்மன் தீர்க்கதரிசி” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

மார்மனின் வார்த்தைகள் 1; மார்மன் 1–8

மார்மன் தீர்க்கதரிசி

மார்மன் புஸ்தகத்தை எழுதுதல்

பலர் ஆயுதங்களை செய்தல், மார்மன் ஒரு குழந்தையாக அவனது தாயும் வாள்கள் நிரப்பப்பட்ட மேஜைக்கு அருகில் நிற்றல்

மார்மன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த ஒரு நேபியன். நிறைய பேர் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத ஒரு காலத்தில் அவன் வளர்ந்தான். பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மக்கள் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்து, கொலை செய்தனர். பல போர்கள் நடந்தன.

3 நேபி 5:12–13; 4 நேபி 1:27–49; மார்மன் 1:1–3, 15, 18–19

மார்மன் மற்றும் அவனது தாயார் பயிர்களை அறுவடை செய்யும்போது அம்மாரோன் அவர்களிடம் பேசுதல், அருகிலுள்ள வயலில் பலர் வேலை செய்தல்

மார்மனுக்கு 10 வயதாக இருந்தபோது, அம்மாரோன் என்ற மனிதன் அவனிடம் வந்தான். நேபியர்களுடைய வரலாற்றின் பதிவேடுகளை அம்மாரோன் பாதுகாத்து வந்தான். அம்மாரோன் மார்மனை நம்பி, பதிவேடுகள் ஒரு மலையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவனிடம் கூறினான். மார்மனுக்கு 24 வயதாக இருந்தபோது, மார்மன் தங்கள் மக்களைப் பற்றி பார்த்ததை எழுதி பதிவேடுகளில் சேர்க்க வேண்டும் என்று அம்மாரோன் கூறினான்.

4 நேபி 1:47–49; மார்மன் 1:2–4

பதின் பருவ மார்மன் மரங்களடர்ந்த தோப்பில் ஜெபித்தல், அவனைச் சுற்றி ஒளி இருத்தல்

மார்மன் வளர்ந்தபோது, தன்னை அம்மாரோன் என்ன செய்யச் சொன்னான் என்பதை நினைவுகூர்ந்தான். மார்மனுக்கு 15 வயதாக இருந்தபோது, கர்த்தர் அவனைச் சந்தித்தார் . மார்மன் இயேசுவின் நற்குணத்தைக் கற்றுக்கொண்டான்.

மார்மன் 1:5, 15

பதின் பருவ மார்மன் கவசம் அணிந்து நேபியர்களின் படைகளைப் பார்த்தல்

மார்மன் இளைஞனாக இருந்தாலும், அவன் வலிமையானவனாக இருந்தான். நேபியர்கள் தங்கள் படைகளை வழிநடத்த அவனைத் தேர்ந்தெடுத்தனர். மார்மன் தன் முழு இருதயத்தோடும் மக்களை நேசித்தான். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவன் விரும்பினான்.

மார்மன் 2:1–2, 12, 15, 19; 3:12

வயதுவந்த மார்மன் சோகமாக இருத்தலும், ஜெபித்தலும் , பின்னணியில் எரியும் நிலம் உள்ளது

மார்மன் மக்களுக்கு உதவ முயன்றான். அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபித்தான். தாங்கள் கெட்ட காரியங்களைச் செய்கிறோம் என்று மக்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லை. அவர்களுக்கு இனிமேலும் உதவி செய்ய அவர்களிடம் தேவனின் வல்லமை இல்லை. அவர்களுக்கு விசுவாசம் இல்லாததால், அற்புதங்கள் நின்றுபோயின. அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர், அவர்களில் பலர் இறந்தனர். மார்மன் சோகமாக இருந்தான்.

மார்மன் 1:13–14, 16–19; 2:23–27; 3:1–12; 4:5, 9–12; 5:1–7

மார்மன் உலோகத் தகடுகளின் மேல் எழுதி ஒழுங்கமைத்தல்

மார்மனுக்கு சுமார் 24 வயதாக இருந்தபோது, பதிவேடுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குன்றிற்குச் சென்றான். மக்களின் கதைகளையும் போதனைகளையும் உலோகத் தகடுகளின் மேல் எழுதத் தொடங்கினான். அவன் என்ன எழுத வேண்டும் என்று தேவன் அவனுக்கு உதவினார். மார்மன் பல ஆண்டுகளாக பதிவேட்டில் பணியாற்றினான். இன்று, அந்தப் பதிவேடு மார்மன் புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறது.

மார்மனின் வார்த்தைகள் 1:3–9; மார்மன் 1:3–4; 2:17–18

மார்மன், அவனது மனைவி மற்றும் அவனது குழந்தைகள் பயணம் செய்தல்

பல போர்களுக்குப் பிறகு, லாமானியர்கள் கிட்டத்தட்ட அனைத்து நேபியர்களையும் கொன்றுவிட்டனர். மார்மன் தனது மக்கள் விரைவில் போய்விடுவார்கள் என்று அறிந்திருந்தான். அவர்கள் மனந்திரும்பாமலும் தேவனிடம் உதவி கேட்காமலும் இருந்ததால் அவன் வருத்தப்பட்டான். ஆனால் அவன் ஜெபித்து தகடுகளைப் பாதுகாக்கும்படி தேவனிடம் கேட்டான். தகடுகளின் மேல் தேவனுடைய வார்த்தைகள் இருந்ததால் அவை பாதுகாப்பாக இருக்கும் என்று அவன் அறிந்திருந்தான்.

மார்மனின் வார்த்தைகள் 1:11; மார்மன் 5:11; 6:6, 16–22

ஒரு வயதான மனிதனாக மார்மன் தனது மகன் மரோனிக்கு உலோகத் தகடுகளைக் கொடுத்தல்

மக்கள் இயேசுவில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மார்மன் விரும்பினான். எதிர்காலத்தில் பலர் புத்தகத்தைப் படிப்பார்கள் என்று அவன் நம்பினான். குறிப்பாக, லாமானியர்களின் குடும்பங்கள் ஒரு நாள் அதை வாசிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அப்படிச் செய்தால், அவர்கள் இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்வார்கள். மார்மன் இறப்பதற்கு முன்பு, அது பாதுகாப்பாக இருக்கும்படி தனது மகன் மரோனியிடம் பதிவேட்டைக் கொடுத்தான்.

மார்மனின் வார்த்தைகள் 1:1–2; மார்மன் 3:17–22; 5:8–24; 6:6; 7; 8:1