“இயேசு பிள்ளைகளை ஆசீர்வதித்தல்” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
இயேசு பிள்ளைகளை ஆசீர்வதித்தல்
அவர்கள் மீதான அவருடைய அன்பைக் காட்டுதல்
இயேசு கிறிஸ்து பல விஷயங்களை மக்களுக்குப் போதித்தார். அவர்கள் கற்றுக்கொண்டதைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு நேரம் தேவை என்பதை அவர் கண்டார். அவர் அவர்களை வீட்டிற்குச் சென்று பரலோக பிதா அவர்களுக்குப் போதித்ததை புரிந்துகொள்ளும்படி அவரிடம் ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார். மறுநாள் அவர்களை மீண்டும் சந்திப்பதாக இயேசு வாக்களித்தார்.
இயேசு நீண்ட காலம் தங்க வேண்டும் என்று மக்கள் அழுதனர். இயேசு மக்களை நேசித்தார். அவர்களுடைய விசுவாசம் மிகவும் பலமாக இருப்பதை அவரால் பார்க்க முடிந்தது. நோயுற்றவர்களையோ அல்லது எந்த விதத்திலாவது காயப்பட்டவர்களையோ தம்மிடம் கொண்டுவரும்படி அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் சுகப்படுத்த விரும்பினார்.
மக்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அவரிடம் வந்தனர். இயேசு அவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கினார். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் முழங்காற்படியிட்டு அவருடைய பாதங்களை முத்தமிட்டார்கள்.
தங்களுடைய சிறு பிள்ளைகளை தன்னிடம் கொண்டு வரும்படி இயேசு அவர்களிடம் கேட்டார். மக்கள் தங்கள் பிள்ளைகளைக் கூட்டிவந்து இயேசுவைச் சுற்றி தரையில் உட்கார வைத்தார்கள்.
எல்லா பிள்ளைகளும் அங்கு அவருடன் இருந்த பிறகு, இயேசு மக்களை தரையில் முழங்காற்படியிடச் சொன்னார். அவரும் முழங்காற்படியிட்டார். பின்னர் அவர் பரலோக பிதாவிடம் ஜெபித்தார். அவருடைய வார்த்தைகளை எழுதப்பட முடியாத அளவுக்கு அற்புதமான விஷயங்களை அவர் சொன்னார். மக்கள் சந்தோஷத்தால் நிரப்பப்பட்டார்கள்.
தன் மீதுள்ள அவர்களின் விசுவாசத்தினிமித்தம் அவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள் என்று இயேசு மக்களிடம் சொன்னார். இயேசு மிகவும் சந்தோஷமடைந்து அழ ஆரம்பித்தார்.
பின்னர் இயேசு ஒவ்வொரு பிள்ளையையும் ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் பரலோக பிதாவிடம் ஜெபித்தார். பின்னர் அவர் மக்களிடம் தங்கள் பிள்ளைகளைப் பார்க்கும்படி கேட்டார்.
தூதர்கள் வானத்திலிருந்து வந்து பிள்ளைகளைச் சுற்றி கூடினர். தூதர்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்ததால், பரலோக ஒளி அவர்களைச் சூழ்ந்தது. மற்றொரு நாளில், இயேசு மீண்டும் பிள்ளைகளை சந்தித்து ஆசீர்வதித்தார். பிள்ளைகளை பேசும்படியும் அவர் ஆசீர்வதித்தார். குழந்தைகளும்கூட பேசினார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு அற்புதமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்.