“இயேசு பன்னிரண்டு சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
இயேசு பன்னிரண்டு சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்
போதிக்கவும் ஞானஸ்நானம் கொடுக்கவும் அதிகாரமளித்தல்
இயேசு கிறிஸ்து உதாரத்துவஸ்தலத்திற்கு வந்தபோது, அவர் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு போதிக்கவும் ஞானஸ்நானம் கொடுக்கவும் அதிகாரம் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவரின் வரத்தைக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரத்தையும் கொடுத்தார். அவர் அவர்களை தம்முடைய சீஷர்கள் என்று அழைத்தார். அவர்கள் செய்யும்படி இயேசு கற்றுக்கொடுத்த காரியங்களை சீஷர்கள் செய்தார்கள்.
3 நேபி 11:1, 18–22, 41; 12:1; 15:11–12; 18:36–37
ஞானஸ்நானம் கொடுப்பது எப்படி என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அவர்கள் சொல்ல வேண்டிய வார்த்தைகளை அவர் அவர்களுக்குக் கூறினார். அந்த நபரை தண்ணீருக்குள் மூழ்க வைத்து மீண்டும் மேலே வர உதவ அவர் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இயேசு அவர்களுக்குக் கற்பித்த விதத்தில் எப்போதும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும் அவர் அவர்களுக்குப் போதித்தார்.
இயேசு தம்முடைய சீஷர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக வேண்டும், வாக்குவாதம் செய்யக்கூடாது என்று விரும்பினார். அவர்கள் வாக்குவாதம் செய்தபோது, அவர்கள் அவருடைய போதனைகளைப் பின்பற்றவில்லை என்று அவர் கூறினார்.
தம்மில் விசுவாசிக்கவும், மனந்திரும்பவும், ஞானஸ்நானம் பெறவும், அதனால் அவர்கள் மீண்டும் பரலோக பிதாவுடன் வாழ முடியும் என்று இயேசு மக்களுக்குப் போதித்தார்.
இயேசு தம்முடைய சீஷர்களிடம், அவர்கள் அவரை விசுவாசித்தால், அவர்கள் பரலோக பிதாவையும் விசுவாசிக்கிறார்கள் என்றார். இயேசுவும் பரலோக பிதாவும் உண்மையானவர்கள் என்பதை அறிய பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உதவுவார்.
இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் போதித்து முடித்தபோது, சென்று எல்லா மக்களுக்கும் போதிக்கும்படி அவர் அவர்களிடம் கூறினார். அவர்கள் எதைச் சாப்பிடுவார்கள், எதைக் குடிப்பார்கள், எதை உடுத்துவார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவர் சொன்னார். அவர்கள் பரலோக பிதாவுக்கு சேவை செய்தால், பரலோக பிதா அவர்களைப் பராமரிப்பார் என்று அவர் அவர்களிடம் கூறினார்.