வேதக் கதைகள்
வாக்குத்தத்த தேசத்தில் ஒரு புதிய வீடு


“வாக்குத்தத்த தேசத்தில் ஒரு புதிய வீடு,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

“வாக்குத்தத்த தேசத்தில் ஒரு புதிய வீடு,” மார்மன் புஸ்தகக் கதைகள்

2 நேபி 4-5

வாக்குத்தத்த தேசத்தில் ஒரு புதிய வீடு

நேபியர்கள் மற்றும் லாமானியர்கள்

லேகியைச் சுற்றியுள்ள குடும்பத்தினர்கள்

வாக்குத்தத்த தேசத்தில் லேகி சரயாவின் குடும்பத்தினர் பெரிதாக வளர்ந்து வந்தனர். அவர்களின் பிள்ளைகளுக்கு பிள்ளைகள் இருந்தனர். லேகிக்கு வயதாகி விட்டது அவன் மரிப்பதற்கு முன், அவன் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினான். கர்த்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, ​​கர்த்தர் அவர்களுக்கு உதவுவார் என்று அவர்களிடம் லேகி கூறினான்.

2 நேபி 4:3-12

லாமானும் லெமுவேலும் நேபியை கண்காணித்தல்

லேகி மரித்த பின்பு, நேபி மக்களை வழிநடத்தினான். அவர்களை கர்த்தருக்குக் கீழ்ப்படியச் சொன்னான். லாமானும் லெமுவேலும் கோபமடைந்தனர். நேபிக்கு பதிலாக தாங்களே வழிநடத்துவதற்காக அவனைக் கொலை செய்ய விரும்பினர்.

2 நேபி 4:13; 5:1-4

குழுவாக மக்கள் பயணம் செய்தல்

கர்த்தர் நேபியிடம் அவனுடைய குடும்பத்துடனும், கர்த்தரைப் பின்பற்ற விரும்பும் அனைவருடனும் வெளியேறுமாறு கூறினார். அவர்கள் பல நாட்கள் பயணம் செய்து வாழ்வதற்கு ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்தனர்.

2 நேபி 5:1, 5-8

மக்கள் விவசாயம் செய்தல்

நேபியுடன் சென்றவர்கள் நேபியர்கள் என்றும், தங்கியிருந்தவர்கள் லாமானியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். நேபியர்கள் தங்களை வழிநடத்தும்படி நேபியிடம் கூறினார்கள். அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். அவர்கள் விவசாயம் செய்தார்கள், விலங்குகளை வளர்த்தார்கள், ஒரு ஆலயத்தையும் மற்ற கட்டிடங்களையும் கட்டினார்கள். போதகர்களும் ஆசிரியர்களும் கர்த்தரைப் பற்றி அவர்களுக்குக் போதித்தார்கள், மக்கள் மகிழ்ச்சியாயிருந்தனர்.

2 நேபி 5:9–11, 13–17, 26–27