“எருசலேமுக்குத் திரும்புதல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
“எருசலேமுக்குத் திரும்புதல்,” மார்மன் புஸ்தகக் கதைகள்
எருசலேமுக்குத் திரும்புதல்
பித்தளை தகடுகளுக்கான பயணம்
லேகியும் சரயாவின் குடும்பமும் வனாந்தரத்தில் பயணம் செய்தனர். பித்தளைத் தகடுகளில் எழுதப்பட்ட வேதங்களைப் பற்றி சொப்பனத்தில், கர்த்தர் லேகியிடம் கூறினார். லாபான் என்னும் பெயருடைய ஒரு மனுஷன் அவற்றை எருசலேமில் வைத்திருந்தான். லேகியின் குடும்பத்தினர் தங்கள் பயணத்தில் பித்தளை தகடுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கர்த்தர் கூறினார்.
பித்தளைத் தகடுகளைக் கொண்டுவர அவனுடைய மகன்களை மீண்டும் எருசலேமுக்கு அனுப்பும்படி கர்த்தர் லேகியிடம் கூறினார். நேபியின் சகோதரர்கள் மறுத்தனர் அதைச் செய்வது கடினமான காரியம் என்று லேகியிடம் சொன்னார்கள். அவர்கள் செல்ல விரும்பவில்லை.
அதைச் செய்வது மிகவும் கடினமான காரியம், ஆனால் நேபி கீழ்ப்படிய விரும்பினான். கர்த்தர் தனக்கும் தன் சகோதரர்களுக்கும் உதவுவார் என்பதை அவன் அறிந்திருந்தான். எருசலேமுக்குத் திரும்பிச் சென்று பித்தளைத் தகடுகளை கொண்டு வருவதாக நேபி லேகியிடம் கூறினான்.
லாமான், லெமுவேல், சாம், நேபி எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள் அங்கே சென்றதும், லாமான் லாபானின் வீட்டிற்குச் சென்று பித்தளைத் தகடுகளைக் கேட்பது என்று முடிவு செய்தனர்.
லாமான் பித்தளைத் தகடுகளைக் கேட்டபோது, லாபான் அவனைக் கொள்ளைக்காரன் என்று அழைத்தான். லாமானைக் கொன்றுவிடுவேன் என்று லாபான் சொன்னான்.
லாமன் ஓடிச்சென்று தன் சகோதரர்களிடம் நடந்ததைச் சொன்னான்.
நான்கு சகோதரர்களும் சோகமாக இருந்தனர். லாமன், லெமுவேல் மற்றும் சாம் வனாந்தரத்தில் உள்ள தங்கள் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல விரும்பினர், ஆனால் நேபிக்கு ஒரு யோசனை வந்தது. பித்தளைத் தகடுகளைப் பெறுவதற்கு லாபானுடன் விற்பனை செய்யலாம் என்றான். அவர்கள் நகரத்தில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, தங்களுடைய தங்கம் மற்றும் வெள்ளி அனைத்தையும் விற்பனை செய்ய எடுத்துக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் லாபானிடம் காட்டியபோது, அவன் அதையெல்லாம் வாங்க விரும்பினான். ஆனால் அவன் இன்னும் பித்தளை தகடுகளைக் கொடுக்கவில்லை. மாறாக, அவன் தனது வேலைக்காரர்களிடம் சகோதரர்களைக் கொன்று அவர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் எடுக்கச் சொன்னான்.
நான்கு சகோதரர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தங்கத்தையும் வெள்ளியையும் விட்டு விட்டு ஓடிச்சென்றனர். லாபானின் வேலைக்காரர்களால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. சகோதரர்கள் ஒரு குகையில் ஒளிந்து கொண்டனர்.
இவ்வளவு கடினமான காரியங்களுக்குப் பிறகு, லாமானும் லெமுவேலும் நேபியின் மீது கோபமடைந்தனர். அவர்கள் நேபியையும் சாமையும் தடியால் தாக்கினர்.
திடீரென்று, ஒரு தூதன் தோன்றி நேபியை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டான். அவர்களை வழிநடத்த நேபி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தூதன் கூறினான். பிறகு எருசலேமுக்குத் திரும்பிப் போகும்படி தூதன் சொன்னான். அவர்கள் பித்தளைத் தகடுகளைப் பெற கர்த்தர் ஒரு வழியை ஆயத்தம் செய்வார்.