வேதக் கதைகள்
இயேசு திருவிருந்தைப் பகிருதல்


“இயேசு திருவிருந்தைப் பகிருதல்” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

3 நேபி 18; 20

இயேசு திருவிருந்தைப் பகிருதல்

அவரை எப்போதும் நினைவுகூர்தல்

இயேசு கிறிஸ்து திரளான மக்களிடம் பேசுதல், அவருடைய சீஷர்கள் அவரிடம் அப்பத்தையும் திராட்சை ரசமுள்ள ஜாடியையும் கொண்டு வருதல்

இயேசு நோயுற்றவர்களைக் குணமாக்கி, சிறு பிள்ளைகளை ஆசீர்வதித்த பிறகு, அவருக்குச் செவிகொடுக்க கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் திருவிருந்தை அறிமுகப்படுத்தினார். கொஞ்சம் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் கொண்டு வரும்படி அவர் தம்முடைய சீஷர்களிடம் கேட்டார்.

3 நேபி 17; 18:1–2

இயேசு கிறிஸ்து அப்பத்தைப் பாதியாகப் பிட்டு அப்பத்தை தம் சீஷர்களுக்குக் கொடுத்தல்

இயேசு அப்பத்தைப் பிட்டு அதை ஆசீர்வதித்தார். அதை சீஷர்களுக்குப் புசிக்கக் கொடுத்தார். அப்பத்தை எல்லா மக்களுக்கும் கொடுக்கும்படி அவர் சீஷர்களிடம் கேட்டார்.

3 நேபி 18:3–4, 6

இயேசு கிறிஸ்து அப்பத் துண்டுகளை வைத்திருத்தல், சிலுவை மற்றும் காலியான கல்லறையின் உருவங்கள் அவருக்குப் பின்னால் இருந்தன

இயேசு, தம்மை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் அப்பத்தைப் புசிக்க வேண்டும் என்றார். அவர்கள் அப்படிச் செய்யும்போது, அவருடைய உடலை அவர்கள் நினைவுகூர வேண்டும். தனது கைகளிலும் கால்களிலும் ஆணித் தழும்புகளையும், தனது விலாவில் ஏற்பட்ட காயத்தையும் மக்கள் உணர்ந்ததை அவர் அவர்களுக்கு நினைவூட்டினார்.

3 நேபி 11:14–15; 18:3–7

இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களில் ஒருவருக்கு திராட்சை ரசத்துடன் ஒரு கிண்ணத்தை கொடுத்தல்

பின்பு இயேசு சீஷர்களுக்குக் குடிக்க திராட்சை ரசத்தைக் கொடுத்தார். திராட்சை ரசத்தை எல்லா மக்களுக்கும் கொடுக்கும்படி அவர் சீஷர்களிடம் கேட்டார்.

3 நேபி 18:8–9

இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் முழங்காற்படியிட்டு ஜெபித்தல்

இயேசு, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் திராட்சை ரசத்தைக் குடிக்கவேண்டும் என்றார். திராட்சை ரசம் குடித்த ஒவ்வொருவரும் தம்முடைய இரத்தத்தை நினைவுகூரும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவர் பாடுபட்டு அவர்களுக்காக மரித்தபோது தம்முடைய இரத்தத்தைக் கொடுத்தார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார்.

3 நேபி 18:11.

இயேசு கிறிஸ்து மக்களிடம் பேசுதல்

அப்பத்தைப் புசிப்பதும் திராட்சை ரசத்தைக் குடிப்பதும் ஒரு கட்டளை என்று இயேசு சொன்னார். அப்பத்தைப் புசித்து திராட்சை ரசத்தைக் குடிப்பதன் மூலம், பரலோக பிதாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் இயேசுவை நினைவுகூரவும் விரும்புவதை மக்கள் காட்டினார்கள். இவைகளை அவர்கள் செய்தால் பரிசுத்த ஆவியானவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று இயேசு சொன்னார்

3 நேபி 18:7, 10–14

இயேசு கிறிஸ்து மக்களிடம் பேசுதல், அவர்கள் அவரைப் பார்த்து புன்னகைத்தல்

ஜனங்கள் அப்பத்தைப் புசித்து திராட்சை ரசத்தைக் குடித்த பின்பு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். அப்பொழுது மக்கள் இயேசுவைப் புகழ்ந்தார்கள்.

3 நேபி 18:4–5, 9; 20:9