“தலைவன் மரோனியும், சேராகெம்னாவும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
தலைவன் மரோனியும், சேராகெம்னாவும்
ஒரு போர் மற்றும் சமாதானமாக வாழ்வதற்கான வாக்குறுதி
சேராகெம்னா லாமானியப் படைகளின் தலைவன் ஆவான் . அவன் நேபியர்களை ஆட்சி செய்யவும் மேலும் அவர்கள் தனது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் விரும்பினான். நேபியர்களை தாக்க சேராகெம்னா தனது படைகளை வழிநடத்தினான்.
நேபியர்கள் தங்கள் வீடுகள், குடும்பங்கள் மற்றும் மதத்தைப் பாதுகாக்க விரும்பினர். லாமானியர்கள் தங்களை ஆண்டால் கர்த்தரை ஆராதிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். நேபியர்கள் தங்கள் எதிரிகளை எதிர்த்துப் போராடத் தேர்ந்தெடுத்தனர்.
மரோனி என்பவன் நேபிய படைகளின் தலைவனாக இருந்தான். மரோனி தனது படைகள் போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்தான்.
மரோனியின் வீரர்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்தனர், அவர்களைப் பாதுகாக்க மரோனி அவர்களுக்கு வலுவான கவசங்களையும் கேடயங்களையும் கொடுத்தார்.
மரோனி தனது படைகளை லாமானியர்களுடன் போரிட அழைத்துச் சென்றான். ஆனால் லாமானியர்கள் நேபியர்களிடம் கவசங்களும் கேடயங்களும் இருப்பதைக் கண்டபோது, அவர்கள் சண்டையிட பயந்தார்கள். லாமனியர்களிடம் மெல்லிய ஆடைகள் மட்டுமே இருந்தன, அவர்களைப் பாதுகாக்க எந்தக் கவசமும் இல்லை.
லாமானியர்கள் வெளியேறினர். அவர்கள் வேறு ஒரு நேபிய தேசத்திற்குள் ஊடுருவிச் செல்ல முயன்றனர். அவர்கள் எங்கே போனார்கள் என்று மரோனிக்கு தெரியாது என்று நினைத்தார்கள்.
ஆனால் லாமானியர்கள் வெளியேறியவுடன், மரோனி அவர்களைப் பின்தொடர உளவாளிகளை அனுப்பினான்.
பின்னர் மரோனி ஆல்மா தீர்க்கதரிசிக்கு ஒரு செய்தியை அனுப்பினான். லாமானியர்கள் என்ன செய்யத் திட்டமிடுகிறார்கள் என்று ஆல்மா கர்த்தரிடம் கேட்க வேண்டும் என்று அவன் விரும்பினான். லாமானியர்கள் மேன்தி என்ற பலவீனமான தேசத்தைத் தாக்க திட்டமிட்டுள்ளதாக கர்த்தர் ஆல்மாவிடம் கூறினார். மரோனி ஆல்மாவின் பேச்சைக் கேட்டான். லாமானியர்களுக்கு எதிராகப் போரிடத் தன் படைகளை வழிநடத்தினான்.
படைகள் போரிட்டன. லாமானியர்கள் மிகவும் வலிமையாகவும் கோபமாகவும் இருந்தனர். நேபியர்கள் லாமானியர்களுக்குப் பயந்து ஓடப் போவதாயிருந்தார்கள். ஆனால் மரோனி அவர்களின் குடும்பங்கள் மற்றும் விசுவாசத்தை அவர்களுக்கு நினைவூட்டினான், அதனால் அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர்.
நேபியர்கள் உதவிக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தனர். கர்த்தர் அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்து, அவர்களுக்குப் பெரிய பலத்தைக் கொடுத்தார். இப்போது லாமனியர்கள் பயந்தார்கள். தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். லாமானியர்கள் பயந்ததைக் கண்ட மரோனி, தனது வீரர்களை சண்டையை நிறுத்தச் சொன்னான். மரோனி லாமானியர்களைக் கொல்ல விரும்பவில்லை.
மரோனி சேராகெம்னாவிடம், லாமானியர்கள் மீண்டும் நேபியர்களுடன் சண்டையிட மாட்டார்கள் என்று உறுதியளித்தால் அவர்கள் போகலாம் என்று கூறினான். சேராகெம்னா கோபமடைந்து தொடர்ந்து சண்டையிட முயன்றான், ஆனால் மரோனியின் வீரர்களை அவரால் வெல்ல முடியவில்லை. பின்னர் சேராகெம்னாவும் அவனது படைகளும் சமாதானமாக வாழ்வதாக உறுதியளித்தனர், மரோனி அவர்களை விடுவித்தான்.