வேதக் கதைகள்
ஆல்மாவும் கோரிகோரும்


“ஆல்மாவும் கோரிகோரும்”மார்மன் புஸ்தக கதைகள் (2023)

ஆல்மா 30

ஆல்மாவும் கோரிகோரும்

தேவன் உண்மையானவர் எனும் விசுவாசம்

கோரிகோர் ஒரு பரபரப்பான சாலையில் ஒன்றாகச் செல்லும்போது ஒருவருடன் சிரித்துப் பேசுதல்

கோரிகோர் என்ற பெயருடைய ஒரு மனிதன் சாரகெம்லா தேசத்திற்கு வந்தான். தேவனும் இயேசு கிறிஸ்துவும் உண்மையானவர்கள் அல்ல என்று மக்களிடம் கூறினான்.

ஆல்மா 30:6, 12, 37–38, 45

கோரிகோர் ஒரு சோகமான குழந்தையைப் பார்த்து புன்னகைத்து சைகை செய்தல்

மக்கள் எதையாவது பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும் என்றான் கோரிகோர். அவன் இயேசுவை நம்பியவர்களை கேலி செய்தான்.

ஆல்மா 30:13–16

கோரிகோர் சிரித்துக் கொண்டே மக்கள் கூட்டத்துடன் பேசுதல்

தேவனின் கட்டளைகள் மக்களுக்குத் தேவையில்லை என்று கோரிகோர் கூறினான். மக்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றான். பலர் அவனை நம்பினர். அவர்கள் கெட்ட காரியங்களைச் செய்ய முடிவு செய்தனர்.

ஆல்மா 30:17–18

கோரிகோர் கட்டப்பட்டு, கிராமத்தை விட்டு வெளியே வீரர்களால் வெளியேற்றப்படுதல்

கோரிகோர் அந்தி-நேபி-லேகியர்களுக்கு கற்பிக்க முயன்றான், ஆனால் அவர்கள் அவனை நம்பவில்லை. அவனை கட்டி புறம்பே அனுப்பி வைத்தனர். மாறாக அவன் கிதியோன் தேசத்திற்கு சென்றான். அங்கிருந்தவர்களும் அவனைக் கட்டிப்போட்டனர். அவர்கள் அவனை ஆல்மாவிடம் அனுப்பினார்கள்.

ஆல்மா 30:19–29

கோரிகோர் ஆல்மாவைப் பார்த்து புன்னகைத்து சைகை செய்தல்

தேவன் உண்மையானவர் அல்ல என்று கோரிகோர் ஆல்மாவிடம் கூறினான். ஆல்மாவும் மற்ற ஆசாரியர்களும் மக்களிடம் பொய் சொல்கிறார்கள் என்றான். அவர்கள் மக்களை முட்டாள்தனமான மரபுகளைப் பின்பற்றச் செய்கிறார்கள் என்று கோரிகோர் கூறினான். மக்களிடம் இருந்து அவர்கள் பணம் பறிப்பதாகவும் அவன் கூறினான். இது உண்மையல்ல என்று ஆல்மாவுக்குத் தெரியும். அவன் தேவனையும் இயேசுவையும் நம்பினான்.

ஆல்மா 30:30–40

கோரிகோர் மடிக்கப்பட்ட கரங்களுடன் பின்னணியில் அமர்ந்திருக்கும்போது ஆல்மா மக்கள் கூட்டத்துடன் பேசுதல்

தீர்க்கதரிசிகள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் தேவன் உண்மையானவர் என்பதை அறிய மக்களுக்கு உதவுவதாக ஆல்மா கூறினான். கோரிகோர் மேலும் ஆதாரம் வேண்டும் என விரும்பினான். கோரிகோருக்கு ஆதாரத்தை தருவதாக ஆல்மா கூறினான். தேவன் கோரிகோரை பேச முடியாதபடி செய்வார் என்று கூறினான். ஆல்மா இதைச் சொன்னவுடன், கோரிகோரால் பேச முடியவில்லை.

ஆல்மா 30:41–50

கோரிகோர் சோகமாக இருத்தல், மக்கள் கூட்டம் அவனை விட்டு விலகிச் செல்லும் போது எழுதப்பட்ட ஒரு காகிதத்தை சுட்டிக்காட்டுதல்

தேவன் உண்மையானவர் என்று தனக்குத் தெரியும் என்று கோரிகோர் எழுதினான். அவன் எப்போதும் அறிந்திருந்தான். பிசாசு தன்னை ஏமாற்றிவிட்டதாக எழுதினான். தேவனைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் பொய்களைப் போதிக்கும்படி பிசாசு கோரிகோரிடம் சொன்னான். கோரிகோரைப் பற்றிய சத்தியத்தை மக்கள் அறிந்தபோது, அவனுடைய போதனைகளை அவர்கள் நம்பவில்லை. அவர்கள் மனந்திரும்பி மீண்டும் இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

ஆல்மா 30:52–53, 57–58