“இயேசு தம் பிதாவிடம் திரும்பச் செல்லுதல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
இயேசு தம் பிதாவிடம் திரும்பச் செல்லுதல்
அவர் புறப்படுவதற்கு முன் தனது சீஷர்களுக்கு சேவை செய்தல்
இயேசு தம்முடைய சுவிசேஷத்தை மக்களுக்குப் போதித்தார். தேவனை நேசிக்கவும் ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் அவர் அவர்களுக்குப் போதித்தார். சீக்கிரத்தில், இயேசு தம் பிதாவிடம் திரும்பிச் செல்வார். அவர் சென்ற பிறகும் மக்களுக்கு தொடர்ந்து போதிக்கும்படி அவர் சீஷர்களிடம் கேட்டுக்கொண்டார்
அவர் புறப்படுவதற்கு முன், இயேசு தம்முடைய சீஷர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று கேட்டார். சீஷர்களில் பெரும்பாலோர் தாங்கள் இயேசுவுக்கு பூமியில் சேவை செய்து முடித்த பிறகு அவருடன் வாழ விரும்புவதாகக் கூறினர். அவர்கள் இறந்த பிறகு அவரோடு வாழ்வார்கள் என்று இயேசு அவர்களுக்கு வாக்குறுதியளித்தார்.
சீஷர்களில் மூன்று பேர் சோகமாக இருந்தார்கள். ஏனென்றால், தாங்கள் விரும்பியதை இயேசுவிடம் சொல்ல அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அவரிடமிருந்து என்ன விரும்புகிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இரட்சகரின் இரண்டாம் வருகை வரை வாழ அவர்கள் விரும்பினர், அதனால் அதிகமான மக்கள் இயேசுவிடம் வர அவர்களால் உதவ முடியும்.
அவர்கள் இறக்க மாட்டார்கள் என்று இயேசு அவர்களுக்கு வாக்குறுதியளித்தார். அவர்கள் பூமியில் தங்கியிருந்து, அவருடைய இரண்டாம் வருகை வரை மக்கள் அவரிடம் வர உதவுவார்கள்.
தங்க விரும்பிய மூவரைத் தவிர மற்ற ஒவ்வொரு சீஷரையும் இயேசு தன் விரலால் தொட்டார். பின்பு இயேசு அங்கிருந்து புறப்பட்டு பரலோக பிதாவிடம் திரும்பிச் சென்றார்.
இதற்குப் பிறகு, வானம் திறக்கப்பட்டது, மூன்று சீஷர்களும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் பல ஆச்சரியமான விஷயங்களைக் கண்டார்கள், கேட்டார்கள், அவற்றைப் பற்றி பேச வேண்டாம் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் இறக்கவோ அல்லது வலியை உணரவோ கூடாது என்பதற்காக அவர்களின் உடல்களும் மறுரூபமாக்கப்பட்டன.
சீஷர்கள் திரும்பி வந்து இயேசுவைப் பற்றி மக்களுக்குத் தொடர்ந்து போதித்தார்கள். மக்கள் இயேசுவைப் பின்பற்ற விரும்பி, அவருடைய சபையில் ஞானஸ்நானம் பெற்றனர். தேவனுடைய அன்பு அவர்களுடைய இருதயங்களில் இருந்தது, அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள், தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அனைவரும் 200 ஆண்டுகள் சமாதானமாக வாழ்ந்தனர்.