வேதக் கதைகள்
மரோனி தீர்க்கதரிசி


“மரோனி தீர்க்கதரிசி” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

மார்மன் 8; மரோனி 1; 7; 10

மரோனி தீர்க்கதரிசி

இயேசு கிறிஸ்துவின் தூய அன்பைக் கொண்டிருத்தல்

மரோனி எரியும் நகரத்தைப் பார்த்தல்

மரோனி கடைசி நேபிய தீர்க்கதரிசி. அவன் நேபியர்களுக்கும் லாமானியர்களுக்கும் இடையேயான ஒரு பெரிய போரில் சண்டையிட்டான். அவனது குடும்பத்தினரும் அவனுக்குத் தெரிந்த அனைவரும் போரில் இறந்தனர். தேசத்திலிருந்த மக்கள் பொல்லாதவர்களாக இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த எவரையும் அவர்கள் கொன்றார்கள். மரோனி இயேசுவை விசுவாசித்தான். இயேசுவே இரட்சகர் என்பதை அவன் மறுதலிக்க மாட்டான்.

மார்மன் 8:2–10; மரோனி 1: 2–3

மரோனி உலோகத் தகடுகளைக் கொண்டு சென்று அவற்றுடன், ஒரு வீரர்களின் குழுவிடமிருந்து ஒளிந்துகொள்ளுதல்.

மரோனியின் தகப்பனாகிய மார்மன், அவர்களுடைய மக்களின் வரலாற்றை உலோகத் தகடுகளின் மேல் எழுதிக் கொண்டிருந்தான். மார்மன் இறப்பதற்கு முன்பு, அவன் அந்தத் தகடுகளை மரோனியிடம் கொடுத்தான். மரோனி தனது சொந்த உயிரையும் தகடுகளையும் பாதுகாக்க ஒளிந்துகொள்ள வேண்டியிருந்தது.

மார்மன் 6:6; 8:1–5, 13; மரோனி 1:1–3

மரோனி ஒரு குகையில் அமர்ந்து உலோகத் தகடுகளின் மேல் எழுதுதல்

மரோனிக்கு வாழ்க்கை கடினமாக இருந்தது, ஆனால் அவன் விசுவாசமுள்ளவனாக நிலைத்திருந்தான். கிறிஸ்துவின் தூய அன்பான தயாளத்துவம் பற்றி மார்மன் போதித்ததை அவன் எழுதினான். இந்த அன்பைப் பெற மக்கள் தங்கள் இருதயத்தின் முழு ஆற்றலுடன் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்று மார்மன் கூறினான். இயேசுவை உண்மையாக பின்பற்றுபவர்களுக்கு தேவன் தயாளத்துவத்தைத் தருகிறார் என்று அவன் கூறினான்.

மரோனி 7:32–33, 40–48; 10:20–21, 23

உணவு வழங்கப்படுவதில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியடைதல், மரோனி புன்னகைத்தல்

லாமானியர்களில் சிலர் தனக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் கொன்று அவனையும் கொல்ல விரும்பிய போதிலும் மரோனி அவர்களை நேசித்தான். எதிர்காலத்தில் லாமானியர்களுக்கு உதவ அவன் உலோகத் தகடுகளில் பல விஷயங்களை எழுதினான். என்றாவது ஒரு நாள் அவர்கள் அந்தப் பதிவேட்டை வாசித்து இயேசுவை மறுபடியும் விசுவாசிப்பார்கள் என்று அவன் நம்பினான்.

மார்மன் 8:1– 3; மரோனி 1:1– 4; 10:1

மரோனி ஒரு புல்லுள்ள குன்றின் மீது அமர்ந்து உலோகத் தகடுகளின் மேல் எழுதுதல்

தேவன் தம்முடைய பிள்ளைகளை எவ்வளவு அன்பாக பாராமரித்திருக்கிறார் என்பதைப் பற்றிச் சிந்திக்க இந்தப் பதிவேட்டை வாசிக்கிற அனைத்து மக்களையும் மரோனி அழைத்தான். ஜெபிக்கவும், பதிவேடு உண்மையா என்று தேவனிடம் கேட்கவும் அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் இயேசுவில் விசுவாசம் வைத்து உண்மையிலேயே அறிய விரும்பினால், தேவன் அவர்களுக்கு சத்தியத்தைத் தெரியப்படுத்துவார் என்று அவன் கூறினான். அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அறிந்து கொள்வார்கள்.

மார்மன் புஸ்தக முன்னுரை மரோனி 10:1–5

மரோனி உலோகத் தகடுகளைப் புதைத்து, மறைவிடத்தின் மீது ஒரு பாறையை நகர்த்துதல்

மரோனி பதிவேட்டை எழுதி முடித்தான். பின்னர் அவன் உலோகத் தகடுகளை நிலத்தில் புதைத்தான். தகடுகளில் எழுதப்பட்ட வரலாறு ஒரு நாள் உலகெங்கிலும் உள்ள தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையை ஆசீர்வதிக்குமென இயேசு மரோனியிடம் கூறினார்.

மார்மன் 8:4, 14–16

இளம் ஜோசப் ஸ்மித் ஒரு பாறையை நகர்த்தி உலோகத் தகடுகளையும் லியஹோனாவையும் பார்த்தல்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, உலோகத் தகடுகள் புதைக்கப்பட்ட இடத்தை ஜோசப் ஸ்மித் என்ற சிறுவனுக்குக் காட்ட தேவன் மரோனியை ஒரு தூதனாக அனுப்பினார். ஜோசப் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படி தேவனால் அழைக்கப்பட்டான். தகடுகளின் மேல் எழுதப்பட்டிருப்பதை மக்கள் வாசிக்கும்படி தேவன் ஜோசப்புக்கு அவற்றை மொழி பெயர்க்க உதவினார். இந்தப் பதிவேடு இப்போது மார்மன் புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறது.

மார்மன் புஸ்தக முன்னுரை