“அனைத்து லாமனியர்களின் ராஜா”மார்மன் புஸ்தக கதைகள் (2023)
“அனைத்து லாமனியர்களின் ராஜா”மார்மன் புஸ்தக கதைகள்
அனைத்து லாமனியர்களின் ராஜா
கர்த்தரை அறிந்து கொள்வதில் ஆவல்
லாமனியர்களுக்கு ஒரு ராஜா இருந்தான், அவன் மற்ற அனைத்து ராஜாக்களையும் ஆட்சி செய்தான். அவன் லாமோனி ராஜாவின் தந்தை. நேபியர்களை எதிரிகள் என அவன் நினைத்தான். ஒரு நாள், அம்மோனுடன் இருக்கும் லமோனியைப் அவன் பார்த்தான். ராஜா, லாமோனியிடம் நேபியனுடன் என்ன செய்கிறாய் என்று கேட்டான். அம்மோனின் சகோதரர்களை சிறையில் இருந்து விடுவிக்கப் போவதாக லாமோனி, ராஜாவிடம் கூறினான்.
மோசியா 10:-11–17; ஆல்மா 20:1-12
ராஜா கோபமடைந்தான். லாமானியர்களிடமிருந்து திருடும் நோக்கத்திலேயே நேபியர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அவன் நினைத்தான். அம்மோனைக் கொன்றுவிட்டு தன்னுடன் வரும்படி லாமோனியிடம் கூறினான்.
லாமோனி அம்மோனைக் கொல்ல மாட்டான். அம்மோனும் அவனது சகோதரர்களும் தேவனின் தீர்க்கதரிசிகள் என்று ராஜாவிடம் கூறினான். அம்மோனின் சகோதரர்களுக்கு உதவப்போவதாகக் கூறினான்.
லாமோனியை தாக்குவதற்கு ராஜா தனது வாளை எடுத்தான், ஆனால் அம்மோன் அவனைத் தடுத்தான். ராஜா அம்மோனைத் தாக்கினான். அம்மோன் தன்னைக் காத்துக்கொண்டான். அவன் ராஜாவின் கையைத் தாக்கினான், அதனால் ராஜாவால் சண்டையிட முடியவில்லை. அம்மோனின் வலிமையைக் கண்டு ராஜா பயந்தான். அவனை ஜீவிக்க அனுமதித்தால் அவனுடைய ராஜ்யத்தில் பாதியை அம்மோனுக்குக் கொடுப்பதாக அவன் உறுதியளித்தான்.
அம்மோன் ராஜ்ஜியத்தை விரும்பவில்லை. மாறாக, தனது சகோதரர்களை சிறையில் இருந்து விடுவிக்குமாறு ராஜாவிடம் கேட்டுக் கொண்டான். லாமோனியின் மீது கோபப்படுவதை நிறுத்துமாறும் ராஜாவைக் கேட்டுக் கொண்டான். ராஜா, லாமோனியை தான் சிந்திக்கும் சிறப்பான வழியில் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அம்மோன் கூறினான்.
அம்மோன் லாமோனியை எவ்வளவாய் நேசிக்கிரான் என ராஜா வியந்தான். அம்மோன் கேட்டதையெல்லாம் செய்ய ஒப்புக்கொண்டான்.
அம்மோனும் லாமோனியும் தேவனைப் பற்றி அவனிடம் கூறியதை மேலும் அறிய ராஜா விரும்பினான். அம்மோனையும் அவனுடைய சகோதரர்களையும் வந்து தனக்கு போதிக்குமாறு அவன் கேட்டான்.
அம்மோனும் லாமோனியும் மித்தோனி தேசத்திற்குச் சென்றனர். அங்கே அம்மோனின் சகோதரர்கள் சிறையில் இருந்தனர். கயிறுகளால் கட்டப்பட்டிருந்த அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை. அம்மோனின் சகோதரர்களை விடுவிக்குமாறு மித்தோனியின் ஆட்சியாளரை லாமோனி சமாதானப்படுத்தினான்.
அவர்கள் விடுதலையானவுடன், அம்மோனின் சகோதரர்கள் லாமோனியின் தந்தையிடம் சென்றனர். அவர்கள் ராஜாவை வணங்கி தங்களை வேலையாட்களாக அமர்த்துமாறு கேட்டுக் கொண்டனர். ராஜா இல்லை என்றான். மாறாக, அவர்கள் தனக்கு நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். சகோதரர்களில் ஒருவனின் பெயர் ஆரோன். அவன் ராஜாவுக்கு வேதவசனங்களைப் படித்து, தேவனைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் போதித்தான்.
ராஜா ஆரோனை நம்பினான். தேவனை அறிந்து கொள்வதற்காக தனது முழு ராஜ்யத்தையும் துறப்பேன் என்றான். தான் என்ன செய்ய வேண்டும் என்று ஆரோனிடம் கேட்டான். ஆரோன், ராஜாவிடம் மனந்திரும்பி விசுவாசத்துடன் தேவனிடம் ஜெபிக்கச் சொன்னான். ராஜா தன் பாவங்கள் அனைத்திற்கும் மனந்திரும்பி வேண்டினான்.
ராஜா தரையில் விழுந்தான். ராஜாவின் வேலைக்காரர்கள் ராணியிடம் சொல்ல ஓடினார்கள்.
ராணி வந்து தரையில் விழுந்திருக்கும் ராஜாவைப் பார்த்தாள். ஆரோனும் அவனது சகோதரர்களும் ராஜாவைக் கொன்றுவிட்டதாக அவள் நினைத்தாள். ராணி கோபமடைந்தாள்
ஆரோனையும் அவனுடைய சகோதரர்களையும் கொல்லும்படி வேலைக்காரர்களிடம் ராணி கூறினாள். ஆனால் வேலையாட்கள் பயந்தார்கள். ஆரோனும் அவனுடைய சகோதரர்களும் மிகவும் வலிமையானவர்கள் என்று சொன்னார்கள். இப்போது ராணி பயந்தாள். நடந்ததை ஊரில் உள்ளவர்களுக்குச் சொல்ல வேலையாட்களை அனுப்பினாள். ஆரோனையும் அவனது சகோதரர்களையும் மக்கள் கொன்றுவிடுவார்கள் என்று அவள் நம்பினாள்.
மக்கள் கோபப்படுவார்கள் என்று ஆரோனுக்குத் தெரியும். ராஜா மரிக்கவில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். ராஜா எழுந்து நிற்க அவன் உதவினான். ராஜா மீண்டும் வலிமை பெற்று எழுந்து நின்றான். ராணியும் வேலைக்காரர்களும் ஆச்சரியப்பட்டார்கள்
ராணிக்கும் வேலையாட்களுக்கும் இயேசுவைப் பற்றி ராஜா போதித்தான். அவர்கள் அனைவரும் இயேசுவை நம்பினார்கள். தன் மக்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று ராஜா விரும்பினான். ஆரோனும் அவனுடைய சகோதரர்களும் தன் ராஜ்ஜியத்தில் எங்கு வேண்டுமானாலும் சுவிசேஷத்தைப் போதிக்கலாம் என்று சட்டம் இயற்றினான். அவர்கள் மக்களுக்குப் போதித்தார்கள், தேசத்தில் போதகர்கள் மற்றும் ஆசிரியர்களாயிருக்க அழைத்தனர்.