“இளம் சேனையின் தாய்மார்கள்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
இளம் சேனையின் தாய்மார்கள்
தேவனை நம்ப பிள்ளைகளுக்குக் கற்பித்தல்
அந்தி-நேபி-லேகியர் கர்த்தரையும் எல்லா மக்களையும் நேசித்தார்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் எப்போதும் தேவனை நம்பலாம் என்று கற்பித்தனர். அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பித்தார்கள்.
ஆல்மா 26:31–34; 27:12, 27–30; 56:47–48; 57:21, 26
நேபியரும் லாமானியரும் ஒரு பெரிய போரில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். நேபியர்கள் தங்கள் சொந்த மக்களையும் அந்தி-நேபி-லேகியரையும் பாதுகாக்க போராடிக் கொண்டிருந்தனர்.
அந்தி-நேபி-லேகியர், தங்களின் கடந்தகால பாவங்களின் காரணமாக, ஒருபோதும் யாருடனும் சண்டையிடக்கூடாது என்ற ஒரு உடன்படிக்கையை அல்லது சிறப்பு வாக்குறுதியை தேவனுடன் செய்திருந்தனர், ஆனால் அவர்கள் நேபியர்களை நேசித்தார்கள், உதவவும் விரும்பினார்கள்.
அந்தி-நேபி-லேகியர் போரில் சண்டையிடப் போகிறார்கள் ஆனால் தீர்க்கதரிசி ஏலமனும் மற்ற சபைத் தலைவர்களும் சண்டையிடுவதில்லை என்ற தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்களை நம்ப வைத்தனர். அந்தி-நேபி-லேகியர் தங்கள் நண்பர்கள் மிகுந்த வேதனையையும் பிரச்சனைகளையும் அனுபவிப்பதை பார்க்க வேண்டியிருந்தது, ஆனால் அவர்கள் தேவனுடனான உடன்படிக்கையைக் காத்துக்கொண்டார்கள்.
அந்தி-நேபி-லேகியரின் மகன்கள் தங்கள் பெற்றோர் செய்த வாக்குறுதியை செய்யவில்லை. இப்போது அவர்கள் சுதந்திரத்திற்காக போராடுவதாக தங்கள் சொந்த வாக்குறுதியை அளித்தனர்.
அவர்களுக்கு மிகுந்த தைரியம் இருந்தது. தாங்கள் சந்தேகப்படாவிட்டால், தேவன் தங்களைப் பாதுகாப்பார் என்பதை அவர்கள் தங்கள் தாய்மார்களிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தார்கள்.
மகன்கள் தங்கள் தாய்மார்களை நம்பினர். மகன்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டார்கள். தேவன் தங்களைப் பாதுகாப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். தேவன் தங்கள் மகன்களைக் காப்பாற்றுவார் என்று தாய்மார்கள் அறிந்திருந்தார்கள்.