“பென்யமீன் இராஜா,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)
பென்யமீன் இராஜா
மக்களுக்கும் தேவனுக்கும் சேவை செய்தல்
பென்யமீன் இராஜா சாரகெம்லா தேசத்தை அரசாண்ட தேவனின் தீர்க்கதரிசி. தம் மக்களுக்குச் சேவை செய்யவும் தேவனைப் பற்றி அவர்களுக்குக் போதிக்கவும் கடினமாகப் பணியாற்றினான். தேவனின் பிற தீர்க்கதரிசிகளின் உதவியுடன், சாரகெம்லாவை பென்யமீன் சமாதானமான மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றினான்.
மார்மனின் வார்த்தைகள் 1:17–18; மோசியா 1:1–7
பென்யமீனுக்கு வயதாகிவிட்டது. மக்களை ஒன்றிணைக்கும்படி தனது மகன் மோசியாவிடம் கேட்டான். அவர்களின் புதிய இராஜாவாக மோசியா இருப்பான் என்று பென்யமீன் அவர்களிடம் சொல்ல விரும்பினான்.
தேசம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். பென்யமின் சொல்வதைக் கேட்க ஆலயத்திற்கு அருகில் தங்களுடைய கூடாரங்களை அமைத்தார்கள்.
மக்கள் அனைவரும் கேட்கும்படியாக,பென்யமின் ஒரு கோபுரத்தின் மேலிருந்து பேசினான். அவர்களை வழிநடத்த தேவன் உதவியதாக பென்யமின் கூறினான். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி ஒரு இராஜாவாக அவர்களுக்குப் போதித்தான். அவன் அவர்களின் பணத்தை எடுக்கவில்லை அல்லது அவனுக்கு சேவை செய்யுமாறு கூறவில்லை. மாறாக, தனது மக்களுக்கும் தேவனுக்கும் சேவை செய்ய உழைத்தான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் சேவை செய்யும் போது, தேவனுக்கு சேவை செய்கிறார்கள் என்று மக்களிடம் பென்யமின் கூறினான். பின்பு அவர்களிடம் இருக்கும் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தது என்று கூறினான். அதற்கு ஈடாக, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர்கள் கீழ்ப்படிந்தபோது, தேவன் அவர்களுக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொடுத்தார்.
பென்யமின் அவர்களிடம் தான் இனி இராஜாவாகவோ அல்லது போதகனாகவோ இருக்க இயலாது என்று கூறினான். அவர்களின் புதிய இராஜாவாக அவனுடைய மகன் மோசியா இருப்பான்.
அப்போது ஒரு தூதன் தம்மைச் சந்தித்ததாக பென்யமின் தன் மக்களிடம் கூறினான். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவார் என்று தேவதூதன் கூறினான். அவர் அற்புதங்களைச் செய்து மக்களைக் குணப்படுத்துவார். சகல மக்களையும் காப்பாற்ற பாடனுபவித்து அவர் மரிப்பார். தம்மை விசுவாசித்து மனந்திரும்புகிற அனைவரையும் இயேசு மன்னிப்பார் என்று பென்யமின் போதித்தான்.
இயேசுவைப் பற்றி பென்யமின் போதித்ததை மக்கள் நம்பினர். அவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதை அறிந்தார்கள். மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து, தங்களை மன்னிக்கும்படி கர்த்தரிடம் வேண்டினார்கள். அவர்கள் ஜெபித்தபின், தேவனுடைய ஆவி அவர்களிடம் வாசம் செய்தார் அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக தேவன் தங்களை மன்னித்தார் என்பதை அறிந்தார்கள்.
மக்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டிருந்ததால் தங்களுக்குள் வித்தியாசமாகவும் புதியதாகவும் உணர்ந்தனர் தற்போது அவர்கள் எப்போதும் நல்ல விஷயங்களைச் செய்ய விரும்பினர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றப்போவதாக வாக்குறுதி அளித்தனர். இயேசுவை நம்பி இந்த வாக்குறுதியை அளித்ததால், அவர்கள் இயேசுவின் மக்கள் என்று அழைக்கப்பட்டனர்