வேதக் கதைகள்
யாரேதும் அவனது குடும்பமும்


“யாரேதும் அவனது குடும்பமும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

ஏத்தேர் 1–46

யாரேதும் அவனது குடும்பமும்

கர்த்தரால் வழிநடத்தப்படும் ஒரு பயணம்

ஒரு கோபுரம் கட்டப்படுதல், அதன் அருகே யாரேதும் அவனது சகோதரனும் மக்கள் வாதிடுவதைப் பார்த்தல்

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு யாரேதும் அவனது குடும்பமும் பாபேலில் வாழ்ந்தனர். அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால் பாபேலில் உள்ள பெரும்பாலான மக்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அந்த மக்கள் பரலோகம் செல்வதற்கு முயற்சி செய்ய ஒரு கோபுரத்தை கட்ட ஆரம்பித்தனர். மக்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியாதபடி கர்த்தர் அவர்களின் மொழியை மாற்றினார்.

ஆதியாகமம் 11:4–9; ஏத்தேர் 1:33

யாரேதின் சகோதரன் ஜெபித்தல், யாரேது நகரத்தைப் பார்த்தல்

யாரேதுக்கு ஒரு சகோதரன் இருந்தான். கர்த்தர் யாரேதின் சகோதரனை நம்பினார். யாரேது உதவிக்காக தேவனிடம் ஜெபிக்கும்படி தனது சகோதரனிடம் கேட்டான். அவனது ஜெபத்தில், யாரேதின் சகோதரன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மொழியை மாற்ற வேண்டாம் என்று கர்த்தரிடம் கேட்டான். அப்போதுதான் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடிந்தது

ஏத்தேர் 1:33–36

யாரேதும் அவனது சகோதரனும் தங்கள் குடும்பத்தினருடன் பேசுதல்

கர்த்தர் அன்பாகவும் இரக்கமாகவும் இருந்தார். யாரேதின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மொழியை அவர் மாற்றவில்லை. பின்னர், அவர்களுக்காக ஒரு விசேஷ தேசத்தை ஆயத்தப்படுத்தியுள்ளதாக கர்த்தர் யாரேதின் சகோதரனிடம் கூறினார். கர்த்தர் அவர்களை அங்கே வழிநடத்துவதாகச் சொன்னார்.

ஏத்தேர் 1:35–42

யாரேது, அவனது சகோதரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நகரத்தை விட்டு வெளியேறுதல், அவர்கள் தங்களுடன் பல விலங்குகளை கொண்டு வருதல்

யாரேதும் அவனது சகோதரனும் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் கூட்டிச் சேர்த்தனர். அவர்கள் தங்கள் விலங்குகளையும் அனைத்து வகையான விதைகளையும் சேகரித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வனாந்தரத்தில் பயணம் செய்தனர். கர்த்தர் மேகத்திலிருந்து அவர்களுடன் பேசி அவர்களை வழிநடத்தினார்.

ஏத்தேர் 1:40–43; 2:1–6

குடும்பங்கள் கடலுக்கு அருகே வருதல்

அவர்கள் வெகுதூரம் பயணித்து ஒரு கடலுக்கு அருகே வந்தனர். அவர்கள் நான்கு வருடங்கள் கரையில் வாழ்ந்தார்கள். நீண்ட காலமாக, யாரேதின் சகோதரன் கர்த்தரிடம் ஜெபிக்கவில்லை

ஏத்தேர் 2:13–14

யாரேதின் சகோதரன் ஜெபித்தல்

கர்த்தர் யாரேதின் சகோதரனிடம் மீண்டும் ஜெபிக்கும்படி கூறினார். யாரேதின் சகோதரன் மனந்திரும்பி கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் அவனை மன்னித்தார்.

ஏத்தேர் 2:14–15

யாரேதின் சகோதரன் ஒரு சிறிய கப்பலை செதுக்குதல்

தோணிகள் எனப்படும் கப்பல்களைக் கட்ட கர்த்தர் யாரேதின் சகோதரனுக்குக் கற்றுக் கொடுத்தார். குடும்பங்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு கடல் வழியாக தோணிகளில் பிரயாணிக்கலாம்.

ஏத்தேர் 2:15–17

யாரேதின் சகோதரன் தோணிகள், கூடாரங்கள் மற்றும் கடலைப் பார்த்தல்.

யாரேதின் சகோதரனும் அவனது குடும்பத்தினரும் தோணிகளைக் கட்டினார்கள். தோணிகளுக்குள் வெளிச்சம் இல்லாததை அவன் கண்டான். அவர்கள் இருளில் கடல் கடந்து பயணிக்க வேண்டுமா என்று அவன் கர்த்தரிடம் கேட்டான். தோணிகளுக்கு வெளிச்சம் வருவதற்கான வழியை யோசிக்கும்படி கர்த்தர் யாரேதின் சகோதரனிடம் கூறினார்.

ஏத்தேர் 2:16–19; 22–25

இயேசு கிறிஸ்து சிறிதளவு தெரிதல், அவருடைய கை யாரேதின் கைகளில் உள்ள கற்களைத் தொடுவதற்கு நீட்டுதல்

யாரேதின் சகோதரன் 16 சிறிய, தெளிவான கற்களைச் செய்தான். அவற்றைத் தொட்டு பிரகாசிக்கச் செய்யும்படி கர்த்தரிடம் அவன் கேட்டான். கர்த்தர் தம் கையை நீட்டி, கற்களை ஒவ்வொன்றாகத் தம் விரலால் தொட்டார். யாரேதின் சகோதரனால் கர்த்தரின் விரலைப் பார்க்க முடிந்தது. கர்த்தருக்கு தன்னைப் போன்ற உடல் இருப்பதைக் கண்டு வியந்தான்.

ஏத்தேர் 3:1–8

இயேசு கிறிஸ்து யாரேதின் சகோதரனிடம் பேசுதல்

யாரேதின் சகோதரனுக்கு மிகுந்த விசுவாசம் இருந்தது என்று கர்த்தர் சொன்னார். அப்பொழுது கர்த்தர் தோன்றி, யாரேதின் சகோதரனுக்குத் தம் ஆவி உடலைக் காட்டினார். “நானே இயேசு கிறிஸ்து” என்று கர்த்தர் கூறினார். அவர் இரட்சகராக தெரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறினார். அவர் யாரேதின் சகோதரனுக்கு இன்னும் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்.

ஏத்தேர் 3:9–20, 25–27

யாரேதின் சகோதரன் எழுதுதல், கற்கள் அவனுக்கு அருகில் மூடப்பட்ட கிண்ணத்தில் உள்ளன

யாரேதின் சகோதரன் தனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் திரும்பினான். அவன் கர்த்தரிடம் இருந்தபோது தான் கற்றதை அவன் எழுதினான். அவன் கற்களையும் தோணிகளில் போட்டான். அவர்களின் பயணத்திற்கு இப்போது வெளிச்சம் கிடைத்தது.

ஏத்தேர் 4;1; 6:2–3

தோணிகள் புயலடிக்கும் கடலில் பயணிக்கின்றன

குடும்பங்கள் கடலைக் கடக்க தோணிகளில் ஏறினர். கர்த்தர் தங்களைப் பராமரிப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். பல புயல்களும் அலைகளும் இருந்தன. சில சமயங்களில் தோணிகளை முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்து கொண்டது. ஆனால் அவர்கள் ஜெபித்தார்கள், கர்த்தர் அவர்களை மீண்டும் தண்ணீரின் மேல் கொண்டுவந்தார். அவர்கள் கர்த்தருக்கு நன்றி கூறும் பல பாடல்களைப் பாடினர்.

ஏத்தேர் 6:4–10

யாரேது, அவனது சகோதரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒரு புதிய தேசத்திற்கு வருதல்

ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, கர்த்தர் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் அடைந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியில் அழுது அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஏத்தேர் 6:11–12