“பழைய ஏற்பாட்டைப்பற்றி,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)
“பழைய ஏற்பாட்டைப்பற்றி,” பழைய ஏற்பாட்டு கதைகள்
பழைய ஏற்பாட்டைப்பற்றி
நீண்ட காலத்திற்கு முன்பே அவருடைய பிள்ளைகளுக்கு பரலோக பிதாவின் வாக்குறுதிகள்
பரிசுத்த வேதாகமத்தின் முதல் பகுதி பழைய ஏற்பாடு. இந்த வேதங்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே எழுதப்பட்டவை. அவர் மீது விசுவாசம் வைக்க உதவும் கதைகள் இதில் உள்ளன. பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் பரலோக பிதாவின் குடும்பத்தின் ஒரு பகுதி என்றும் அவர் தனது பிள்ளைகளை நேசிக்கிறார் என்றும் அது நமக்குக் கற்பிக்கிறது.
பழைய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்து யேகோவா மற்றும் கர்த்தர் என்று அழைக்கப்படுகிறார். அவர் பரலோக பிதாவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுகிறார். ஆதாம் மற்றும் ஏவாளின் காலத்திலிருந்தே, பரலோக பிதா தனது தீர்க்கதரிசிகளுடன் பேசுவதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகள் உண்மை என்பதை அறிய நமக்குதவ பரலோக பிதா பரிசுத்த ஆவியை அனுப்புகிறார்.
யாத்திராகமம் 6:2–3; 2 நாளாகமம் 20:20; ஆமோஸ் 3:7; 2 பேதுரு 1:21; மோசே 2:1
தீர்க்கதரிசி ஆபிரகாம் மற்றும் அவனது மனைவி சாராள் ஆகியோரின் குடும்பம் வளர்ந்து உலகம் முழுவதையும் ஆசீர்வதிக்கும் என கர்த்தர் வாக்குறுதி அளித்தார். அவர்களின் பேரன் யாக்கோபு ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்டிருந்தான், அது ஒரு தேசமாக மாறியது. அவர்கள் இஸ்ரவேலின் வீடு அல்லது இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். இயேசு கிறிஸ்து எப்போது வருவார் என்று எதிர்பார்ப்பதை தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு கற்பித்தனர்.
ஆதியாகமம் 15:5–6; 17:1–8; உபாகமம் 18:15; ஏசாயா 7:14
பழைய ஏற்பாட்டில் உள்ள பல கதைகள், இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை கர்த்தர் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைக் காட்டுகின்றன.
ஆதியாகமம் 9:13–17; எரேமியா 11:4–5; எபிரெயர் 11:1–35
இஸ்ரவேலர்கள் தீர்க்கதரிசிகளுக்குச், செவிகொடுத்து, கட்டளைகளைக் கைக்கொண்டபோது கர்த்தர் அவர்களுக்கு உதவினார். அவர்கள் கீழ்ப்படியாதபோது, அவரால் அவர்களுக்கு உதவ முடியவில்லை.
உபாகமம் 11:26–28; யோபு 36:11–12
நீங்கள் பரலோக பிதாவின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். பரலோக பிதா அன்பானவர், அவர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக, நீங்கள் மீண்டும் பரலோக பிதாவுடன் வாழத் திரும்பிச் செல்லலாம். இஸ்ரவேலர்களுக்கு கற்பிக்கப்பட்டதைப் போலவே, நீங்கள் கர்த்தர் மீது விசுவாசம் வைத்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கலாம்.