வேதக் கதைகள்
சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ


“சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ,” பழைய ஏற்பாட்டு கதைகள்

தானியேல் 1; 3

சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ

விசுவாசத்தின் ஆபத்தான சோதனை

படம்
ராஜா நேபுகாத்நேச்சார் மற்றும் தங்க சிலை

நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு பிரம்மாண்டமான, தங்கச் சிலையை கட்டி, அதை வணங்கும்படி தனது மக்களை கட்டாயப்படுத்தினான். அவர்கள் மறுத்தால், அவர்கள் அக்கினி சூளையில் போடப்படுவார்கள்.

தானியேல் 1: 6–7; 3: 1–6

படம்
சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ

தானியேலின் நண்பர்கள் சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ தேவனை நேசித்தார்கள், ராஜாவின் பொய்யான கடவுளை வணங்க மாட்டார்கள். ராஜா அவர்கள் மீது கோபமடைந்தான்.

தானியேல் 3: 6–15

படம்
சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோர் ராஜாவுடன் பேசுகிறார்கள்

மூன்று நண்பர்களும் தேவனை மட்டுமே வணங்குவதாக ராஜாவிடம் சொன்னார்கள். தேவன் அவர்களைப் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் அவர் அவர்களைக் காப்பாற்றாமலிருந்தாலும், அவர்கள் நம்பியதில் அவர்கள் நிற்பார்கள்.

தானியேல் 3: 15–18

படம்
அக்கினியில் மூன்று மனிதர்களும், தூதனும்

சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோர் மீது ராஜா கோபமடைந்தான். அவன் அவர்களை அக்கினிச் சூளையில் எறிந்தான். ஆனால் ராஜா அக்கினிச் சூளைக்குள் பார்த்தபோது, மூன்று மனிதர்களுடன் அக்கினியில் ஒரு பரலோக நபர் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அவர்கள் தீயினால் காயமடையவில்லை.

தானியேல் 3: 19–25

படம்
மூன்றுபேர் நெருப்பிலிருந்து வெளியேறுகிறார்கள்

சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோரை ராஜா அழைத்தான், அவர்கள் சூளைக்கு வெளியே நடந்தார்கள். தீ அவர்களை காயப்படுத்தவில்லை அல்லது அவர்களின் ஆடைகளை கூட எரிக்கவில்லை.

தானியேல் 3: 26–27

படம்
சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோர் ராஜாவுடன் பேசுகிறார்கள்

சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோர் தங்கள் உயிருக்கு ஆபத்தில் இருந்தபோதும் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்களின் உதாரணம் ராஜா தேவனை நம்ப உதவியது.

தானியேல்3:28–29

அச்சிடவும்