“நெகேமியா,” பழைய ஏற்பாட்டு கதைகள்
“நெகேமியா,” பழைய ஏற்பாட்டு கதைகள்
நெகேமியா 1–2; 4; 6
நெகேமியா
எருசலேமில் சுவரை புனரமைத்தல்
நெகேமியா பாரசீகத்தில் வாழ்ந்த ஒரு யூதர். அவன் ராஜாவின் நம்பகமான வேலைக்காரன். எருசலேமில் யூதர்கள் கஷ்டப்படுவதை ஒரு நாள் நெகேமியா கேள்விப்பட்டான். எருசலேமை பாதுகாக்கும் சுவர்கள் அழிக்கப்பட்டன, அவை மீண்டும் கட்டப்படவில்லை. எருசலேம் அபாயத்தில் இருந்தது. கர்த்தரின் உதவிக்காக நெகேமியா உபவாசம் இருந்து ஜெபித்தான்.
நெகேமியா ஏன் மிக சோகமாக இருந்தான் என்று ராஜா அவனிடம் கேட்டான். எருசலேமில் உள்ள அபாயத்தைக் குறித்து அவன் ராஜாவிடம் கூறினான். அவனால் உதவ முடியும் என்று ராஜா, சொன்னான். எருசலேம் சென்று சுவரை மீண்டும் கட்டும்படி நெகேமியா கேட்டுக்கொள்ளப்பட்டான். நெகேமியாவை ஒரு தலைவனாக்கி அவனுக்கு தேவையான பொருட்களை ராஜா வழங்கினான்.
நெகேமியா மற்றும் யூதர்கள் எருசலேமின் சுவர்களை மீண்டும் கட்ட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் எதிரிகள் அவர்களை கேலி செய்து தடுக்க முயன்றனர்.
நகரை விட்டு வெளியேறுமாறு நெகேமியாவை எதிரிகள் ஏமாற்ற முயன்றனர். ஆனால் நெகேமியா செல்ல மாட்டான். அவன் கர்த்தரை நம்பினான். அவன் ஒரு சிறந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான்.
நெகேமியா தனது மக்களை பயப்பட வேண்டாம் என்று கூறினான். அதை பாதுகாப்பாக வைக்க சுவரில் காவலர்களை அவர்கள் வைத்தனர். யூதர்கள் சுவரை கட்டிக்கொண்டே இருந்தனர். கர்த்தர் யூதர்களுக்கு பலம் கொடுத்தார், அவர்கள் 52 நாட்களில் சுவரை கட்டி முடித்தனர். எருசலேம் மீண்டும் பாதுகாப்பாக இருந்தது.