வேதக் கதைகள்
தீர்க்கதரிசி எலிசா


“தீர்க்கதரிசி எலிசா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

“தீர்க்கதரிசி எலிசா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

2 இராஜாக்கள் 2; 4

தீர்க்கதரிசி எலிசா

கர்த்தரின் அற்புதங்கள்

படம்
எலியா எலிசாவுடன் பேசுதல்

எலியா தீர்க்கதரிசி மூலம், கர்த்தர் எலிசாவை அடுத்த தீர்க்கதரிசியாக ஆயத்தப்படுத்தினார். கர்த்தர் எலியாவை பரலோகத்துக்கு அழைத்துச் சென்றார்.

2 இராஜாக்கள் 2:1–15

படம்
பெண் எண்ணெய் ஊற்றுதல்

எலிசா பல அற்புதங்களைச் செய்ய கர்த்தர் உதவினார். எலிசா ஒருமுறை பல ஜாடிகளை நிரப்ப ஒரு ஏழை பெண்ணின் எண்ணெயை ஆசீர்வதித்தார். பின்னர் அந்தப் பெண் தனது கடன்களைச் செலுத்த எண்ணெயை விற்றாள்.

2 இராஜாக்கள் 4:1–7

படம்
எலிசா குடும்பத்துடன் பேசுகிறான்

மற்றொரு முறை, விசுவாசமுள்ள ஒரு பெண் எலிசாவுக்கு சேவை செய்தாள், அவனிடம் மிகவும் அன்பாக இருந்தாள். எலிசா அவளுக்கு சேவை செய்ய என்ன செய்ய முடியும் என்று கேட்டான். அவள் ஒரு குழந்தையை எதிர்பார்த்தாள். எலிசா அவளையும் கணவனையும் ஒரு மகனைப் பெற ஆசீர்வதித்தான்.

2 இராஜாக்கள் 4:8–17

படம்
குடும்பம் கொண்டாடுதல்

ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு, மகன் நோய்வாய்ப்பட்டு மரித்தான். தன் மகனைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் அந்தப் பெண் எலிசாவைத் தேடிச் சென்றாள். எலிசா வந்து சிறுவனை ஆசீர்வதித்தான், அவன் உயிர் பெற்றான். எலிசா பல அற்புதங்களைச் செய்ய கர்த்தர் உதவினார். அவன் கர்த்தருடைய சிறந்த தீர்க்கதரிசி.

2 இராஜாக்கள் 4:18–37

அச்சிடவும்