வேதக் கதைகள்
தீர்க்கதரிசி எரேமியா


“தீர்க்கதரிசி எரேமியா,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தீர்க்கதரிசி எரேமியா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

எரேமியா 1–52

தீர்க்கதரிசி எரேமியா

அவனது பிறப்புக்கு முன்பே அழைக்கப்பட்டான்

படம்
ஒரு தீர்க்கதரிசியாக எரேமியா அழைக்கப்பட்டான்

எரேமியா சிறு வயதில் எருசலேமில் வாழ்ந்தான். ஒரு நாள் கர்த்தர் எரேமியாவிடம் வந்து அவனை ஒரு தீர்க்கதரிசியாயிருக்க அழைத்தார். எரேமியா பிறப்பதற்கு முன்பே அவன் தீர்க்கதரிசியாக தேர்ந்தெடுக்கப்பட்டான் என்று கர்த்தர் அவனிடம் கூறினார். எரேமியாவின் வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று கர்த்தருக்குத் தெரியும். ஆனால் அவர் எப்போதும் அவனுடன் இருப்பார் என்று அவர் எரேமியாவுக்கு வாக்களித்தார்.

எரேமியா 1:1–10

படம்
எரேமியா மக்களை எச்சரித்தல்

எருசலேமில் உள்ள மக்கள் கர்த்தருடன் தங்கள் வாக்குறுதிகளை காத்துக்கொள்ளவில்லை. அவர்களின் துன்மார்க்கத்தின் காரணமாக, எரேமியா அவர்கள் பிடிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தான். அவர்கள் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரித்திருந்தால் எருசலேம் நகரம் அழிக்கப்படாது என்று கர்த்தர் கூறினார். ஆனால் மக்கள் கேட்கவில்லை.

எரேமியா 6:1–19; 8–9; 17:21–27

படம்
எரேமியா சிறைச்சாலையில்

எரேமியா பல ஆண்டுகளாக மக்களுக்கு போதித்தான். ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லை. மாறாக, அவர்கள் எரேமியாவை காயப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எரேமியா 20:2; 26:8–9; 37:15–18; 38:6

படம்
எருசலேம் அழிக்கப்படுவதை எரேமியா பார்த்துக்கொண்டிருத்தல்

எரேமியா மக்களை நேசித்தான். அவர்களுடைய பாவங்களுக்காக அவன் அழுதான். அவன் சொன்னதைப் போல், எருசலேம் அழிக்கப்பட்டது, மக்கள் பிடித்துச் செல்லப்பட்டனர்.

எரேமியா 9:1–8; 25:9–12; 52:1–10

படம்
எரேமியா தீர்க்கதரிசனங்களை எழுதுதல்

எரேமியா எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனுடைய தீர்க்கதரிசனங்களை எழுதும்படி கர்த்தர் அவனுக்குச் சொன்னார். விஷயங்கள் கடினமாக இருந்தபோதும் எரேமியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான் தனது மக்கள் கர்த்தருக்கு அளித்த வாக்குறுதிகளை கைக்கொள்ள வேண்டும் என்று அவன் தொடர்ந்து சொன்னான்.

எரேமியா 36:1–2, 27–32

அச்சிடவும்