வேதக் கதைகள்
தீர்க்கதரிசி மல்கியா


“தீர்க்கதரிசி மல்கியா,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தீர்க்கதரிசி மல்கியா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

மல்கியா 13

தீர்க்கதரிசி மல்கியா

தசமபாக நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தல்

மோசமான தசமபாகம் கொடுக்கும் மக்கள்

யூதர்கள் தங்கள் பயிர்கள் மற்றும் விலங்குகளில் பத்தில் ஒரு பகுதியை கர்த்தருக்குக் கொடுத்து தசமபாகம் செலுத்தினர். அவர்கள் தசமபாகம் கொடுத்தபோது கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார். ஆனால் சில யூதர்கள் மோசமான ரொட்டி அல்லது குருட்டு அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தசமபாகமாக கொடுக்கத் தொடங்கினர். அவர்கள் சிறந்ததை தங்களுக்கு வைத்துக் கொண்டனர்.

ஆதியாகமம் 14:20; 28:22; உபாகமம் 12:6, 11, 17; மல்கியா 1:7–8, 12–13

மல்கியா மக்களுக்கு கற்பித்தல்

கர்த்தர் திருப்தி அடையவில்லை. தசமபாகம் கொடுப்பதில் அவர்கள் நேர்மையற்றவர்களாக இருந்தபோது அவர்கள் கர்த்தரை கொள்ளையடிப்பதாக ஒரு தீர்க்கதரிசியான மல்கியா, யூதர்களிடம் கூறினான். மல்கியா அவர்களை மனந்திரும்பச் சொன்னான்.

மல்கியா 3:8–9

மல்கியா மக்கள் நேர்மையான தசமபாகம் கொடுத்தலைக் கவனித்தல்

கர்த்தர் யூதர்களுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார். அவர்கள் நேர்மையான தசமபாகம் கொடுத்தால், பரலோகத்திலிருந்து கர்த்தர் பெரும் ஆசீர்வாதங்களைப் பொழிவார்.

மல்கியா 3:10–12