வேதக் கதைகள்
பூமியின் சிருஷ்டிப்பு


“பூமியின் சிருஷ்டிப்பு,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“பூமியின் சிருஷ்டிப்பு,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 1–2; மோசே 1–3; ஆபிரகாம் 3–5

பூமியின் சிருஷ்டிப்பு

பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு ஒரு அழகான வீடு

தேவனும் கர்த்தரும் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தல்

நம்முடைய பரலோக பிதாவாகிய தேவன் பரலோகத்தில் இரட்சிப்பின் திட்டத்தை முன்வைத்தார். நாம் அனைவரும் மகிழ்ச்சியில் கத்தினோம்! ஒரு சரீர உடலைப் பெற நாம் பூமிக்கு வர முடியும். பூமியில் இருக்கும்போது, தேவ குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற கற்றுக்கொள்வோம். தேவனின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கர்த்தர் பூமியை சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:1; யோபு 38:4–7; மோசே 1:32–33; 2:1; ஆபிரகாம் 3:22–27

ஆகாயத்தில் கோள்

முதல் நாளில், கர்த்தர் ஒளியை இருளிலிருந்து பிரித்தார். அவர் ஒளியை பகல் என்றும் இருளை இரவு என்றும் அழைத்தார்.

ஆதியாகமம் 1:3–5; மோசே 2:3–5; ஆபிரகாம் 4:1–5

மேகங்களும் சமுத்திரமும்

இரண்டாவது நாளில், வானத்தில் உள்ள மேகங்களுக்கும் பூமியிலுள்ள சமுத்திரங்களுக்கும் இடையில் தண்ணீரைப் பிரித்தார்.

ஆதியாகமம் 1:6–8; மோசே 2:6–8; ஆபிரகாம் 4:6–8

சமுத்திரத்திற்கருகில் காடு

மூன்றாம் நாளில், கர்த்தர் பெரிய சமுத்திரங்களையும் வறண்ட நிலத்தையும் உருவாக்கினார். அவர் தண்ணீருக்கு கடல் என்றும், வறண்ட நிலத்திற்கு பூமி என்றும் பெயரிட்டார். பூக்கள், பழங்கள், தாவரங்கள் மற்றும் மரங்களால் நிலத்தை அழகாக மாற்றினார்.

ஆதியாகமம் 1:9–13; மோசே 2:9–13; ஆபிரகாம் 4:9–13

இரவு மற்றும் பகலின் சித்தரிப்பு

நான்காவது நாளில், பகலில் பிரகாசிக்க சூரியனைப் படைத்தார். பின்னர் அவர் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இரவில் பிரகாசிக்க படைத்தார்.

ஆதியாகமம் 1:14–19; மோசே 2:14–19; ஆபிரகாம் 4:14–19

கடல் பிராணிகள்

ஐந்தாம் நாளில், கர்த்தர் கடலில் மீன்களையும், வானத்தில் பறவைகளையும் உண்டாக்கினார். அவர் உயிரினங்களை பலுகிப்பெருக ஆசீர்வதித்தார் மற்றும் தண்ணீரை நிரப்புமாறு மீன்களை ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம் 1:20–23; மோசே 2:20–23; ஆபிரகாம் 4:20–23

காட்டு விலங்குகள்

ஆறாவது நாளில், அவர் நிலத்தில் விலங்குகளை உருவாக்கினார், சில நடந்தன, சில ஊர்ந்து சென்றன.

ஆதியாகமம் 1:24–25; மோசே 2:24–25; ஆபிரகாம் 4:24–25

ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும்

பரலோக பிதாவும் கர்த்தரும் ஆறாவது நாளில் பூமிக்குச் சென்றார்கள். ஆணும் பெண்ணும் தேவனின் சாயலில் படைக்கப்பட்டார்கள். பரலோக பிதா ஒருவரையொருவர் கவனித்து குழந்தைகளைப் பெறச் சொன்னார். ஆணும் பெண்ணும் நிலத்தையும் விலங்குகளையும் பராமரிக்க பொறுப்பளிக்கப்பட்டனர்.

ஆதியாகமம் 1:26–27; மோசே 2:26–27; ஆபிரகாம் 4:26–31; 5:7–8

ஆதாமும் ஏவாளும் விலங்குகளைப் பார்க்கிறார்கள்

பரலோக பிதா அவர்கள் உருவாக்கிய எல்லாவற்றைக் குறித்தும் மகிழ்ச்சியாக இருந்தார். ஏழாம் நாளில், அவர்கள் தங்கள் எல்லா வேலைகளிலிருந்தும் ஓய்வெடுத்தார்கள். பூமி அழகாகவும், உயிர்களால் நிறைந்ததாகவும் இருந்தது.

ஆதியாகமம் 2:1–3; மோசே 3:1–3; ஆபிரகாம் 5:1–3