வேதக் கதைகள்
நாகமானை எலிசா குணமாக்குதல்


“நாகமானை எலிசா குணமாக்குதல்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“நாகமானை எலிசா குணமாக்குதல்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

2 இராஜாக்கள் 5

நாகமானை எலிசா குணமாக்குதல்

எளிய விசுவாசத்தைத் தொடர்ந்து எவ்வளவு பெரிய அதிசயம்

சுகவீனமாய், படுக்கையில் நாகமான்,

வெகு தொலைவில் அசீரியாவில் நாகமான் என்ற ஒருவன் வசித்து வந்தான். அவன் அசீரிய இராணுவத்தில் சிறந்த தலைவனாக இருந்தான். ஆனால் நாகமானுக்கு தொழுநோய் எனப்படும் வலிமிகுந்த தோல் நோய் இருந்தது.

2 இராஜாக்கள் 5:1

இஸ்ரவேல் சிறுமி நாகமானின் மனைவியுடன் பேசுதல்

நாகமானின் மனைவியின் வேலைக்காரி ஒரு இஸ்ரவேல் சிறுமி. சிறுமிக்கு கர்த்தர் மீது விசுவாசம் இருந்தது. தீர்க்கதரிசி எலிசாவை நாகமான் சந்திக்க முடிந்தால், அவனுடைய நோயிலிருந்து நாகமான் குணமடைவான் என்று அவள் சொன்னாள்.

2 இராஜாக்கள் 5:2–4

எலிசாவைக் கண்டுபிடிக்க நாகமான் பிரயாணித்தல்

எலிசாவைக் கண்டுபிடிக்க நாகமான் நீண்ட தூரம் பயணம் செய்தான். ஒரு பெரிய அற்புதத்தால் அவன் குணமடைவான் என்று நாகமான் நினைத்தான்.

2 இராஜாக்கள் 5:5–8

எலிசாவின் வேலைக்காரனுடன் நாகமான் பேசுதல்

நாகமான் தனது வேலைக்காரர்கள், குதிரைகள் மற்றும் ரதங்களுடன் எலிசாவின் வீட்டிற்கு வந்தான். எலிசா தனது வேலைக்காரனை நாகமானுக்கு அறிவுறைகளை வழங்க அனுப்பினான். யோர்தான் ஆற்றில் நாகமான் ஏழு முறை கழுவினால் கர்த்தர் அவனைக் குணமாக்குவார்.

2 இராஜாக்கள் 5:9–10

நாகமான் ஆற்றங்கரையில் புகார் செய்தல்

கர்த்தரின் தீர்க்கதரிசி வெளியே வந்து அவனை உடனே குணமாக்க விரும்பியதால் நாகமான் கோபமடைந்தான். அசீரியாவில் உள்ள பெரிய ஆறுகளைப் போல யோர்தான் நதி நன்றாக இல்லை என்று நாகமான் புகார் கூறினான்.

2 இராஜாக்கள் 5:11–12

வேலைக்காரன் நாகமானுடன் நதிக்கரையில் பேசுதல்

ஆனால், ஏன் நாகமான் இவ்வளவு எளிமையான வேலையை செய்யக்கூடாது என்று நாகமானின் வேலைக்காரர்கள் கேட்டார்கள். அது நாகமானுக்குப் புரியவில்லை என்றாலும், கர்த்தரின் தீர்க்கதரிசி அதை அவனைச் செய்யச் சொன்னான்.

2 இராஜாக்கள் 5:13

குணமடைந்த நாகமான் யோர்தான் ஆற்றில்

நாகமான் பெருமைப்படுவதை நிறுத்திவிட்டு, அவனது வேலைக்காரர்களின் பேச்சைக் கேட்டான். அவன் தன்னை யோர்தான் ஆற்றில் ஏழு முறை கழுவினான். பின்னர், எலிசா சொன்னது போல் கர்த்தர் நாகமானை குணப்படுத்தினார். எலிசா ஒரு தீர்க்கதரிசி என்பதையும், கர்த்தர் உண்மையானவர் என்பதையும் நாகமான் அறிந்தான்.

2 இராஜாக்கள் 5:14–15