வேதக் கதைகள்
தாவீது ராஜா


“தாவீது ராஜா,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தாவீது ராஜா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

1 சாமுவேல் 18–19; 31; 2 சாமுவேல் 1; 5; 11–12

தாவீது ராஜா

ஒரு ராஜாவின் போராட்டங்கள்

சவுல் ராஜாவும் தாவீதும் நகரத்தைப் பார்க்கிறார்கள்

இஸ்ரவேலின் ராஜாவான சவுல், கோலியாத் மீது தாவீது பெற்ற வெற்றியால் ஈர்க்கப்பட்டான். சவுல் தாவீதை தன் படைகளுக்கு தலைவராக்கினான்.

1 சாமுவேல் 18:5

தாவீது

தாவீது கர்த்தரை நேசித்தான், எப்போதும் சரியானதைச் செய்ய விரும்பினான். இஸ்ரவேல் மக்கள் தாவீதை நேசித்தார்கள்.

1 சாமுவேல் 18:6–7

சவுல் கோபமாகப் பார்க்கிறான்

சவுல் பொறாமைப்பட்டு தாவீதைக் கொல்ல முயன்றான். ஆனால் தாவீது கர்த்தரைப் பின்தொடர்ந்தான், கர்த்தர் அவனை சவுலிடமிருந்து காப்பாற்றினார்.

1 சாமுவேல் 18:6–16; 19:1

இஸ்ரவேலர் இறுதி சடங்கு

இஸ்ரவேலர் பல போர்களில் சண்டையிட்டனர். ஒரு நாள் சவுலும் அவனுடைய மகன்களும் போரில் மரித்தார்கள். தாவீது அவர்களை நேசித்தான், அவர்கள் இறந்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டான். இப்போது இஸ்ரவேலருக்கு ஒரு புதிய ராஜா தேவை. கர்த்தர் தாவீதை ராஜாவாக தேர்ந்தெடுத்தார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

1 சாமுவேல் 31:2–6; 2 சாமுவேல் 1:11–12; 5:1–5

தாவீது இராணுவத்துக்கு தலைமைதாங்குதல்

கர்த்தர் தாவீது ராஜாவை ஆசீர்வதித்து அவனுக்கு வழிகாட்டினார். கர்த்தருடைய உதவியுடன், தாவீதின் இராணுவம் அவர்களின் எதிரிகளை வென்றது.

2 சாமுவேல் 5:6–10, 17–25

தாவீது திராட்சைபழம் சாப்பிடுகிறான்

ஒரு நாள் தாவீது போருக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, அவன் வீட்டிலேயே இருந்தான். அவன் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தான். அவள் பெயர் பத்சேபாள், தாவீது அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் அவள் ஏற்கனவே தாவீது இராணுவத்தில் இருந்த ஒரு வீரரான உரியாவை மணந்திருந்தாள்.

2 சாமுவேல் 11:1–3

தாவீது உரியாவுடன் பேசுகிறான்

தாவீது பத்சேபாளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான், எனவே அவளது கணவன் உரியா கொல்லப்படும்படியாக ஒரு ஆபத்தான போருக்கு அவனை அனுப்பினான்.

2 சாமுவேல் 11:4–17

தாவீதும் பத்சேபாளும்

உரியா போரில் இறந்ததை விரைவில் தாவீது அறிந்தான். பத்சேபாளை தன் வீட்டிற்கு அழைத்து வர தாவீது தன் வேலைக்காரர்களை அனுப்பி, அவளை மணந்தான்.

2 சாமுவேல் 11:24, 26–27

நாத்தான் தாவீதுடன் பேசுகிறான்

ஆனால் தாவீது செய்த காரியங்களில் கர்த்தர் மகிழ்ச்சியடையவில்லை. தாவீதின் பாவம் எவ்வளவு தீவிரமானது என்று சொல்ல நாத்தான் என்ற தீர்க்கதரிசியை கர்த்தர் அனுப்பினார். உரியாவுக்கும் பத்சேபாவிற்கும் செய்த காரியங்களுக்காக தாவீது மிகவும் வருத்தப்பட்டான். அவன் கர்த்தரிடமிருந்து மன்னிப்பு கேட்க ஜெபம் செய்தான்.

2 சாமுவேல் 11:27; 12:1–13