வேதக் கதைகள்
எஸ்தர் ராணி


“எஸ்தர் ராணி,”பழைய ஏற்பாட்டு கதைகள்

“எஸ்தர் ராணி,”பழைய ஏற்பாட்டு கதைகள்

எஸ்தர் 2–5; 7–9

எஸ்தர் ராணி

ஆபத்து நேரத்தில் தைரியம்

படம்
ராஜாவின் அரண்மனையில் எஸ்தர்

சில இஸ்ரவேலர் யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். எஸ்தர் பாரசீகத்தில் வாழ்ந்த ஒரு யூதர். அவளுடைய பெற்றோர் மரித்துவிட்டார்கள், எனவே அவளுடைய ஒன்றுவிட்ட அண்ணன் மொர்தெகாய் அவளை கவனித்துக்கொண்டான். ராஜ்யத்தில் உள்ள மற்ற இளம் பெண்களுடன் அவள் ராஜாவின் அரண்மனைக்கு அழைக்கப்பட்டாள். ராஜா ஒரு புதிய ராணியை விரும்பினான், அவன் எஸ்தரைத் தேர்ந்தெடுத்தான்.

எஸ்தர் 2:2–7, 16–17

படம்
மக்கள் ஆமானுக்கு தலைவணங்குகிறார்கள்

ராஜாவுக்கு ஆமான் என்ற ஒரு வேலைக்காரன் இருந்தான். அவன் பெரும் வல்லமையோடு உயர்ந்தான். ராஜா தேசத்தை ஆள ஆமான் உதவி செய்தான். ராஜா, அனைவரும் ஆமானுக்கு தலைவணங்கச் செய்தான்.

எஸ்தர் 3:1–2

படம்
மொர்தெகாயும் ஆமானும்

ஆனால் மொர்தெகாய் ஆமானுக்கு தலைவணங்க மாட்டான். மொர்தெகாய் கர்த்தருக்கு மட்டுமே தலைவணங்குவான். இது ஆமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மொர்தெகாயையும் யூதர்கள் அனைவரையும் தண்டிக்க அவன் விரும்பினான்.

யாத்திராகமம் 20:5; எஸ்தர் 3:5–6, 8

படம்
மக்கள் குழுவிற்கு அறிவிக்கும் போர் வீரன்

யூதர்கள் ராஜாவின் சட்டங்களை பின்பற்றவில்லை என்று ஆமான் ராஜாவிடம் கூறினான். ஆகவே ராஜா ஆமானிடம் ஒரு புதிய சட்டத்தை உருவாக்குமாறு சொன்னான்: ஒரு குறிப்பிட்ட நாளில், யூதர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.

எஸ்தர் 3:8–11, 13

படம்
மொர்தெகாய் எஸ்தருடன் பேசுகிறான்

ராஜாவிடம் பேசுமாறு எஸ்தரை மொர்தகாய் கேட்டான். ராஜா ஆமானின் சட்டத்தை மாற்றி யூதர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் எஸ்தர் பயந்தாள். சிலசமயங்களில் அழைப்பு இல்லாமல் அவனிடம் பேச வருபவர்களை ராஜா கொன்றான்.

எஸ்தர் 4:5–11

படம்
எஸ்தர் மக்களைப் பார்த்தல்

கொல்லப்படவிருக்கும் யூதர்களைப்பற்றி யோசிக்க மொர்தெகாய் எஸ்தரிடம் கேட்டான். யூதர்களைக் காப்பாற்றுவதற்காக எஸ்தரை ராஜாவின் அரண்மனையில் கர்த்தர் வைத்திருக்கலாம் என்று மொர்தெகாய் கூறினான்.

எஸ்தர் 4:13–14

படம்
எஸ்தர் ஜெபித்தல்

எஸ்தர் ராஜாவிடம் பேச வேண்டும் என அறிந்திருந்தாள், அது கொல்லப்பட்டாலும் கூட. எஸ்தர் எல்லா யூதர்களையும் அவளுடைய வேலைக்காரர்களையும் தன்னுடன் உபவாசிக்குமாறு கேட்டாள்.

எஸ்தர் 4:15–16

படம்
எஸ்தர் வாசலைப் பார்க்கிறாள்

மூன்று நாட்கள் உபவாசம் இருந்தபின், எஸ்தர் தன்னை தயார்படுத்திக் கொண்டு ராஜாவைப் பார்க்கச் சென்றாள்.

எஸ்தர் 5:1

படம்
எஸ்தர் ராஜாவுக்கு தலைவணங்குதல்

அவள் ராஜாவை அணுகியபோது, அவன் தன் செங்கோலை நீட்டினான். இதன் பொருள் ராஜா அவளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான், அவளைக் கொல்ல மாட்டான். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். தன் மக்கள் ஆபத்தில் இருப்பதாக எஸ்தர் ராஜாவிடம் சொன்னாள். ஆமானின் சட்டத்தின் காரணமாக, அவளும் ராஜ்யத்தில் உள்ள அனைத்து யூதர்களும் கொல்லப்படுவார்கள்.

எஸ்தர் 5:2–3; 7:4–6

படம்
போர் வீரன் மக்களுக்கு அறிவித்தல்

ராஜா ஆமானின் மீது கோபமடைந்து அவனைக் கொன்றான். ராஜா யூதர்களைப் பாதுகாக்கும் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கினான். யாராவது அவர்களை காயப்படுத்த முயன்றால் இப்போது அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

எஸ்தர் 7:9–10; 8:10–11

படம்
எஸ்தர்

எஸ்தரின் கர்த்தர் மீதுள்ள விசுவாசமும், ராஜாவுடன் பேசுவதற்கான தைரியமும் அவளுடைய மக்களைக் காப்பாற்றியது. மரணம் மற்றும் துக்கத்திற்கு பதிலாக, ஒரு விருந்து நடந்தது. யூதர்கள் கொண்டாடினர்.

எஸ்தர் 8:16–17; 9:18–32

அச்சிடவும்