“ஆபிரகாமும் ஈசாக்கும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)
“ஆபிரகாமும் ஈசாக்கும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்
ஆதியாகமம் 17:21–22
ஆபிரகாமும் ஈசாக்கும்
ஒரு தந்தை, ஒரு மகன் மற்றும் ஒரு பலி
கர்த்தர் வாக்குறுதியளித்தபடியே ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர்.
அவர்கள் ஈசாக்கை நேசித்தார்கள். சரியானதைத் தேர்ந்தெடுப்பதற்கும் கர்த்தரை நம்புவதற்கும் அவர்கள் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
ஈசாக்கின் மூலம் அவர்களது குடும்பத்தினர் பூமி முழுவதையும் ஆசீர்வதிப்பார்கள் என்று கர்த்தர் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஒரு நாள் கர்த்தர் ஆபிரகாமிடம் ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று ஈசாக்கை பலியாகக் கொடுக்கும்படி கூறினார்.
அவர்கள் மலைக்குச் செல்லும் வழியில், பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே என்று ஈசாக்கு கேட்டான். கர்த்தர் ஒன்றை வழங்குவார் என்று ஆபிரகாம் கூறினான்.
மோரியா மலையில், ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி அதன்மீது விறகை வைத்தான்.
கர்த்தர் கட்டளையிட்டபடி, ஆபிரகாம் ஈசாக்கை பலிபீடத்தின் மீது படுக்கும்படி கேட்டான். இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தம் பிதாவை நம்பியதைப் போலவே ஈசாக்கு ஆபிரகாமை நம்பினான்.
ஆபிரகாம் ஈசாக்கை பலியிடவிருந்தபோது, கர்த்தருடைய தூதன் அவனைத் தடுத்தான். ஆபிரகாம் கர்த்தரிடத்தில் விசுவாசத்தைக் காட்டினான். ஆபிரகாம் எப்போதுமே கர்த்தரைப் பின்பற்றுவான் என்று அறிந்திருந்தான்.
ஆபிரகாம் மேலே பார்த்தபோது புதரில் சிக்கிய ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். கர்த்தர் பலிக்கு ஆட்டுக்கடாவை வழங்கினார்.
பரலோக பிதா தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பலியாகக் கொடுப்பார் என்பதைப்பற்றி ஆபிரகாமும் ஈசாக்கும் அறிந்து கொண்டனர். ஆபிரகாம் கீழ்ப்படிந்ததால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனை நம்பினார். ஒரு நாள் அவனுடைய குடும்பம் வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையைத் தாண்டி வளரும் என்ற கர்த்தரின் வாக்குறுதியை ஆபிரகாம் நம்பினான்.