“ராகாபும் வேவுகாரர்களும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)
“ராகாபும் வேவுகாரர்களும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்
ராகாபும் வேவுகாரர்களும்
ஒரு குடும்பத்தை காப்பாற்றுகிற ஒரு தேர்ந்தெடுப்பு
ராகாப் என்ற பெயருள்ள ஒரு பெண், இஸ்ரவேலர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு எரிகோவில் வாழ்ந்தாள். கர்த்தர் இஸ்ரவேலர்களுக்காக செங்கடலைப் பிரித்தார் என்று அவள் கேள்விப்பட்டாள். இஸ்ரவேலர்கள் தன் பட்டணத்திற்கு எதிராக போராட கர்த்தர் உதவுவார் என்று ராகாப் அறிந்திருந்தாள். எரிகோவிலிருந்த மக்கள் துன்மார்க்கர்கள்.
யோசுவா தீர்க்கதரிசி இஸ்ரவேல் படையை வழிநடத்தினான். அவன் இரண்டு வேவுகாரர்களை எரிகோவிற்கு அனுப்பினான். ஆனால் வேவுகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர், அவர்களை கைது செய்ய எரிகோவின் ராஜா காவலர்களை அனுப்பினான்.
ராகாபின் வீட்டுக்கு வேவுகாரர்கள் வந்தனர். ராகாப் வேவுகாரர்களுக்கு உதவ ஒப்புக் கொண்டதால், அவள் அவர்களை தன் கூரையில் மறைத்து வைத்தாள்.
ராஜாவின் ஆட்கள் ராகாபின் வீட்டில் தேடினார்கள், ஆனால் வேவுகாரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் சென்ற பிறகு, அவர்களுடைய படை எரிகோவுக்கு எதிராகப் போராட வரும்போது அவளுடைய குடும்பத்தைப் பாதுகாக்கும்படி வேவுகாரர்களை ராகாப் கேட்டாள். ராகாபின் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும் என்று அவளிடம் வேவுகாரர்கள் உறுதியளித்தனர். பின்னர் வேவுகாரர்கள் தப்பிப்பதற்கு உதவும்படி ராகாப் தனது ஜன்னலுக்கு வெளியே ஒரு கயிற்றை வீசினாள்.
வேவுகாரர்கள் யோசுவா தீர்க்கதரிசியிடம் திரும்பிவந்து, ராகாபின் வீட்டிலுள்ள யாருக்கும் தீங்கு செய்ய வேண்டாம் என்று இஸ்ரவேல் படையிடம் கூறினார்கள். பின்னர், இஸ்ரவேலர்கள் எரிகோவுடன் போரிட்டபோது, அவர்கள் ராகாபுக்கு அளித்த வாக்குறுதியை காத்துக்கொண்டார்கள். ராகாபின் தைரியம் அவளுடைய குடும்பத்தை காப்பாற்றியது. அவளுடைய குடும்பம் கர்த்தரின் மக்களுடன் சேர்ந்தது.