வேதக் கதைகள்
சீனாய் மலையில் மோசே


“சீனாய் மலையில் மோசே,” பழைய ஏற்பாட்டுக் கதைகள் (2022)

“சீனாய் மலையில் மோசே,” பழைய ஏற்பாட்டுக் கதைகள்

யாத்திராகமம் 19–2024; 31–34; உபாகமம் 4–7

சீனாய் மலையில் மோசே

கர்த்தரை நினைவுகூர மக்களுக்கு உதவுதல்

சீனாய் மலை

மோசேயும் இஸ்ரவேலரும் வனாந்தரத்தின் வழியே பயணம் செய்தனர். அவர்கள் சீனாய் மலை என்றழைக்கப்பட்ட மலைக்கு வந்தனர்.

யாத்திராகமம் 19:1

மோசே ஜெபித்தல்

கர்த்தரிடம் பேசுவதற்காக மோசே மலையில் ஏறினான். இஸ்ரவேலர்களுடன் நேருக்கு நேர் பேச விரும்புவதாக கர்த்தர் மோசேயிடம் கூறினார்.

யாத்திராகமம் 19:3, 9–11

மலையைச் சூழ்ந்துள்ள மேகம்

இஸ்ரவேலர் சீனாய் மலையின் அடிப்பகுதிக்கு வந்தனர், மேலும் கர்த்தர் மலையைச் சுற்றி புகை மூட்டத்தை ஏற்படுத்தினார். கர்த்தர் மேகத்தில் இருந்தார். அவர் இஸ்ரவேலர்களிடம் பேசினார் மற்றும் அவர்களுக்கு கட்டளைகளைக் கொடுத்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது மலை நடுங்கியது.

யாத்திராகமம் 19:16–19; 20:1–17; உபாகமம் 4:12–13, 33; 5:4–5

இஸ்ரவேலர் பயந்தனர்

இஸ்ரவேலர் பயந்தனர். கர்த்தர் விரும்புவதை மோசே அவர்களிடம் சொல்லும்விதமாக கர்த்தரிடம் பேசுமாறு அவர்கள் மோசேயைக் கேட்டனர்.

யாத்திராகமம் 20:18–19

மலைமீது இஸ்ரவேல் மூப்பர்கள்

ஆரோனையும் 70 இஸ்ரவேல் மூப்பர்களையும் கர்த்தரின் அதிகப் போதனைகளைப் பெற மோசே மலைக்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்கு கர்த்தர் தோன்றினார்.

யாத்திராகமம் 24:1, 9–11

கர்த்தர் மோசேக்கு கல் பலகைகளில் எழுதுதல்

பின்னர் மூப்பர்களை விட்டு விட்டு மோசே இன்னும் மலைக்கு மேலே செல்லும்படி கர்த்தர் கூறினார். மோசே கீழ்ப்படிந்தான். கல் பலகைகளில் கர்த்தர் தனது நியாயப்பிரமாணத்தையும் கட்டளைகளையும் எழுத தனது விரலைப் பயன்படுத்தினார். 40 நாட்களாக, கர்த்தர் மோசேக்கு பல காரியங்களைக் கற்பித்தார்.

யாத்திராகமம் 24:12–18; 31:18

இஸ்ரவேலர் தங்கக் கன்றுக்குட்டியை உருவாக்குதல்

மோசே சீனாய் மலையில் இருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் அவனுக்காகக் காத்திருந்து சோர்வடைந்தனர். அவர்கள் எகிப்தில் இருந்ததைப் போல வணங்குவதற்காக சிலைகளை உருவாக்கும்படி ஆரோனிடம் சொன்னார்கள். ஆரோன் அவர்களின் தங்கத்தை சேகரித்து ஒரு கன்றுக்குட்டியின் சிலையை உருவாக்கினான்.

யாத்திராகமம் 32:1–4

இஸ்ரவேலர் தங்கக் கன்றுக்குட்டியை வணங்குதல்

இஸ்ரவேலர் தங்கக் கன்றுக்குட்டியை வணங்கி பலிகளைச் செலுத்தினர். எகிப்திலிருந்து அவர்களை விடுவித்தது தங்கக் கன்றுக்குட்டிதான், கர்த்தர் அல்ல, என்று அவர்கள் சொன்னார்கள்.

யாத்திராகமம் 32:4–6, 21–24

மோசே மலையில் இருந்து இறங்குதல்

இஸ்ரவேலர் தம்மை மறந்து ஒரு விக்கிரகத்தை வணங்குவதை கர்த்தர் அறிந்தார். திரும்பிச் சென்று மக்களை மனந்திரும்பச் சொல்லும்படி மோசேக்கு அவர் கட்டளையிட்டார்.

யாத்திராகமம் 32:7–10

மோசே இஸ்ரவேலர்களுடன் பேசுதல், தங்கக் கன்றுக்குட்டி அழிக்கப்படுதல்

மோசே சீனாய் மலையில் இருந்து இறங்கி வந்து இஸ்ரவேலர் தங்கக் கன்றுக்குட்டியை வணங்குவதைப் பார்த்தான். அவன் மிகவும் விரக்தியடைந்தான். கர்த்தர் எழுதிய நியாயப்பிரமாணம் மற்றும் கட்டளைகளுக்கு கீழ்படிய மக்கள் தயாராக இல்லை. மோசே கல் பலகைகளை உடைத்து தங்கக் கன்றுக்குட்டியை அழித்தான். இஸ்ரவேலர் மனந்திரும்பவும் அவர்களின் உண்மையான தேவனை நினைவுகொள்ளவும் அவன் உதவினான்.

யாத்திராகமம் 32:15–20, 25–29

மோசே ஜெபித்தல்

இஸ்ரவேலர்களை மன்னிக்கவும், அவர்களுடன் மீண்டும் வாக்குத்தத்தங்கள் செய்யவும் கர்த்தரிடம் மோசே கேட்டான். மோசே அவர்களை வழிநடத்தி கற்பிப்பதாக வாக்களித்தான்.

யாத்திராகமம் 32:30–34

பத்து கட்டளைகளின் கல் பலகைகளுடன் மோசே

புதிய கல் பலகைகளை உருவாக்கி மீண்டும் சீனாய் மலைக்குச் செல்லும்படி கர்த்தர் மோசேயிடம் சொன்னார். கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு ஒரு புதிய வாக்குறுதியை அளித்தார் மற்றும் அவருடைய பத்து கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தார்.

யாத்திராகமம் 20:2–17; 34:1–17, 28; உபாகமம் 6:24–25; 7:12–13