“ஆதாம் ஏவாளின் குடும்பம்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)
“ஆதாம் ஏவாளின் குடும்பம்,” பழைய ஏற்பாட்டு கதைகள்
ஆதாம் ஏவாளின் குடும்பம்
கர்த்தரைப் பின்பற்ற தெரிந்துகொள்ளுதல்
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு, பூமியில் அவர்களுக்கான பரலோக பிதாவின் திட்டத்தைப்பற்றி அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டார்கள். அவர்கள் பல குழந்தைகளைப் பெற்றனர், மேலும் அவர்கள் கர்த்தரைப்பற்றி தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் அவர்களுக்குக் கற்பித்தனர். ஆதாம் ஏவாளின் சில பிள்ளைகள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர்களில் சிலர் அதை தேர்ந்தெடுக்கவில்லை.
ஆதாம் ஏவாளின் குடும்பம் ஞாபகப் புத்தகம் ஒன்றை வைத்திருந்தனர். அவர்கள் தங்கள் குடும்ப வரலாற்றை புத்தகத்தில் எழுதினர். கர்த்தர் எவ்வாறு உதவினார் என்பதைப்பற்றி அவர்கள் எழுதினார்கள்.
காயீனும் ஆபேலும் ஆதாம் ஏவாளின் இரண்டு மகன்கள். ஆபேல் கர்த்தரை நேசித்தான் மற்றும் அவரைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தான். காயீன் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அவன் கலகம் செய்யத் தேர்ந்தெடுத்தான்.
ஆதாம் ஏவாளின் குடும்பம் வளர்ந்து கொண்டே இருந்தது. இன்னும் நிறைய பேர் பிறந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தேர்ந்தெடுக்க சுதந்திரம் இருந்தது. காலப்போக்கில், சிலர் கர்த்தருடைய கட்டளைகளுக்கு எதிராக கலகம் செய்தனர். மக்கள் மனந்திரும்ப கற்றுக்கொடுக்க கர்த்தர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.