வேதக் கதைகள்
யோபு


“யோபு,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2021)

“யோபு,” பழைய ஏற்பாட்டு கதைகள்

யோபு 1–3; 19; 38–42

யோபு

கர்த்தரின் அன்பை நம்புதல்

படம்
யோபு மற்றும் குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடுதல்

கர்த்தரை நேசித்த, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்த ஒரு நல்ல மனிதன் யோபு. அவனுக்கும் அவனது மனைவிக்கும் 10 பிள்ளைகள் இருந்தனர், அவனுக்கு பல மிருகங்களின் மந்தைகளும் பெரிய செல்வமும் இருந்தன.

யோபு 1:1–5

படம்
யோபு புயலைப் பார்த்தல்

யோபுவின் விசுவாசத்தை சோதிக்க கர்த்தர் அனுமதித்தார். யோபு கடினமான காரியங்களை அனுபவித்தான்.

யோபு 1:6–12

படம்
யோபுவின் வீடு தீப்பிடித்தது

ஒரு நாள் யோபுவின் அநேக விலங்குகள் திருடப்பட்டன. பின்னர் யோபுவின் சொத்துக்கள் அனைத்தையும் நெருப்பு எரித்தது, மற்றும் அவனது வேலையாட்கள் மற்றும் பிற விலங்குகளையும் கொன்றது. பின்னர் ஒரு புயல் யோபுவின் மகனது வீட்டைக் கீழே தள்ளியது. யோபுவின் பிள்ளைகள் உள்ளே இருந்தனர், அவர்கள் அனைவரும் மரித்தனர். யோபுக்கும் அவனது மனைவிக்கும் அவர்களின் ஆரோக்கியத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

யோபு 1:13–19

படம்
யோபுவும் அவனது மனைவியும் ஜெபித்தல்

யோபுவும் அவனது மனைவியும் துக்கமாக இருந்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் இழந்தனர், தங்கள் பிள்ளைகளைக் கூட. ஆனால் யோபுவுக்கு இன்னும் கர்த்தர் மீது விசுவாசம் இருந்தது. நடந்ததற்காக அவன் கர்த்தரைக் குறை கூறவில்லை.

யோபு 1:20–22

படம்
யோபுவின் மனைவி நோய்வாய்ப்பட்ட யோபுக்கு உணவளித்தல்

பின்னர் யோபு மிகவும் நோய்வாய்ப்பட்டான். வலிமிக்க புண்கள் அவனது உடலை மூடின. இந்த மோசமான காரியங்கள் அனைத்தும் ஏன் நடக்கின்றன என்று யோபுவும் அவனது மனைவியும் ஆச்சரியப்பட்டார்கள்.

யோபு 2:7–9; 3:1–11

படம்
இயேசு யோபுவுக்கு பிரபஞ்சத்தைக் காட்டுதல்

கர்த்தர் யோபுவிடம் பேசினார், அவனுக்கு பூமியையும் நட்சத்திரங்களையும் எல்லா உயிரினங்களையும் காட்டினார். கர்த்தர் யோபுவுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தார். பரலோக பிதாவின் பிள்ளைகள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்ளவும் அவரைப் பின்பற்றவும் உதவுவதற்காகவே அனைத்தும் உருவாக்கப்பட்டன.

யோபு 38–41

படம்
யோபுவும் குடும்பமும்

யோபு மனந்திரும்பி, சந்தேகப்பட்டதற்காக மன்னிக்கும்படி கர்த்தரிடம் கேட்டான். கர்த்தரை நம்புவதாக அவன் வாக்களித்தான். யோபு தன்னை நேசிக்கிறான் என்பதை கர்த்தர் அறிந்திருந்தார். அவர் யோபுவைக் குணமாக்கி, அவனுக்கு அதிகமான பிள்ளைகளுடனும், முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு செல்வத்தாலும் ஆசீர்வதித்தார்.

யோபு 19:25–26; 42

அச்சிடவும்