Scripture Stories
நோவாவும் அவனது குடும்பமும்


“நோவாவும் அவனுடைய குடும்பமும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“நோவாவும் அவனுடைய குடும்பமும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 6–9; மோசே 8

நோவாவும் அவனது குடும்பமும்

ஒரு பேழை, வெள்ளம் மற்றும் கர்த்தருடைய வாக்குறுதிகள்

படம்
நோவா மக்களைப் பார்க்கிறான்

நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார்கள். மற்ற மக்கள் அனைவரும் மிகவும் பொல்லாதவர்களாயிருந்தனர். மக்கள் மனந்திரும்பாவிட்டால் ஒரு வெள்ளம் பூமியை மூடும் என்று கர்த்தர் நோவாவிடம் சொன்னார்.

ஆதியாகமம் 6: 5–13 ; மோசே 8: 13–17

படம்
நோவா மக்களுக்கு கற்பித்தல்

கர்த்தர் அவர்களை நேசிக்கிறார் என்றும் அவர்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்றும் நோவா மக்களுக்கு கற்பித்தான். அவர்கள் கேட்கவில்லை.

மோசே 8:19–30

படம்
நோவாவும் குடும்பத்தினரும் பேழையைக் கட்டுதல்

மக்கள் மனந்திரும்ப மாட்டார்கள் என்று நோவா சோகமாக இருந்தான். ஒரு பேழை என்று அழைக்கப்படுகிற ஒரு பெரிய கப்பலைக் கட்டும்படி கர்த்தர் நோவாவிடம் சொன்னார். வெள்ளத்தின் போது நோவாவின் குடும்பத்தை பேழை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

ஆதியாகமம் 6: 14–18 ; மோசே 8:25

படம்
விலங்குகள் பேழைக்குள் நடக்கின்றன

நோவாவின் குடும்பத்தினர் பேழைக்குள் உணவைக் கொண்டு வந்தனர். கர்த்தர் ஒவ்வொரு வகையான, குறைந்தது இரண்டு விலங்குகளை நோவாவுக்கு அனுப்பினார். விலங்குகள் பேழைக்குள் சென்றன, ஏழு நாட்களுக்குப் பிறகு மழை பெய்யத் தொடங்கியது.

ஆதியாகமம் 6: 18–22 ; 7: 1–9

படம்
கடலில் மிதக்கும் பேழை

கர்த்தர் எச்சரித்தபடியே, 40 பகலும் 40 இரவும் மழை பெய்தது. ஒரு வெள்ளம் பூமியை மூடியது.

ஆதியாகமம் 7:6–23.

படம்
நோவாவும் குடும்பமும்

நோவாவின் குடும்பமும் பேழையில் உள்ள அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக தண்ணீரில் மிதந்தன.

ஆதியாகமம் 7:24; 8:1–3

படம்
பூமியில் நோவா, குடும்பம் மற்றும் விலங்குகள்

வெள்ளம் முடிந்ததும், பேழை வறண்ட நிலத்தில் இறங்கியது. கர்த்தரை வணங்குவதற்கும், அவர்களைப் பாதுகாத்தமைக்காக அவருக்கு நன்றி செலுத்துவதற்கும் நோவாவும் அவனுடைய குடும்பத்தினரும் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். மீண்டும் ஒருபோதும் பூமியில் வெள்ளம் ஏற்படாது என்று கர்த்தர் உறுதியளித்தார். அவர் அளித்த வாக்குறுதியின் நினைவூட்டலாக வானவில் ஒன்றை அனுப்பினார்.

ஆதியாகமம் 8: 13–22 ; 9: 8–17

அச்சிடவும்