“ஆகார்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)
“ஆகார்,” பழைய ஏற்பாட்டு கதைகள்
ஆகார்
அவரது மகளுக்காக கர்த்தரின் திட்டம்
ஆகார் சாராளின் வேலைக்காரி. சாராள் வயதானவள், அவளுக்கு பிள்ளைகள் இல்லை. அவர்கள் பிள்ளைகள் பெறும்படியாக, ஆகாரை திருமணம் செய்து கொள்ளும்படி அவள் தனது கணவர் ஆபிரகாமிடம் கூறினாள். ஆபிரகாமும் ஆகாரும் திருமணம் செய்து கொண்டனர், விரைவில் ஆகார் குழந்தை பெறவிருந்தாள்.
ஆகாரும் சாராளும் ஒருவருக்கொருவர் தயவற்றவர்களாக இருக்கத் தொடங்கினர். ஆகார் பாலைவனத்திற்கு ஓடிப்போய்விட முடிவெடுத்தாள்.
ஆகார் பயணம் செய்தபோது, அவள் மிகவும் சோர்வாகவும் தாகமாகவும் இருந்தாள். கடைசியாக, அவள் தண்ணீருள்ள ஒரு இடத்திற்கு வந்து அங்கே ஓய்வெடுத்தாள்.
ஆகாரின் கஷ்டங்களைப்பற்றி கர்த்தருக்குத் தெரியும், அவளுக்கு உதவ ஒரு திட்டம் வைத்திருந்தார். ஆபிரகாம் மற்றும் சாராளிடம் திரும்பிச் செல்லும்படி அவளிடம் கேட்க, ஒரு தூதனை அவர் அனுப்பினார். ஆகாரின் குடும்பம் வளரும் என்று அவன் வாக்களித்தான். அவள் பெறவிருக்கும் குழந்தை ஒரு ஆண் எனவும், அவள் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட வேண்டும் என்றும் அவன் கூறினான்.
ஆகார் தேவனை நம்பினாள் மற்றும் தூதனுக்கு கீழ்ப்படிந்தாள். அவள் மீண்டும் ஆபிரகாம் மற்றும் சாராளிடம் திரும்ப வந்தாள். ஆகார் ஒரு ஆண் குழந்தை பெற்றாள், அவனுடைய பெயர் இஸ்மவேல். கர்த்தர் அவளை கவனித்துக்கொண்டிருப்பதை ஆகார் அறிந்திருந்தாள்.