Scripture Stories
ஆபிரகாமும் சாராளும்


“ஆபிரகாமும் சாராளும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2021)

“ஆபிரகாமும் சாராளும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 11–15; 17; ஆபிரகாம் 1–2

ஆபிரகாமும் சாராளும்

மனித குடும்பத்தை ஆசீர்வதிப்பதாக ஒரு வாக்குறுதி

படம்
ஆபிரகாமை ஆசாரியரிடமிருந்து தூதன் காப்பாற்றுகிறான்

ஆபிரகாம் ஊர் நகரில் வசித்து வந்தான். அங்குள்ள பொல்லாத ஆசாரியர்கள் அவனை தங்கள் விக்கிரகங்களுக்கு பலியிட விரும்பினர். ஆபிரகாம் ஜெபம் செய்தான், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

ஆபிரகாம் 1:1–20

படம்
ஆபிரகாமும் சாராளும் ஒட்டகத்துடன் பயணம் செய்கிறார்கள்

அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமுக்கும் அவனுடைய மனைவி சாராளுக்கும் ஊரை விட்டு தொலைதூர தேசத்திற்குச் செல்லும்படி கட்டளையிட்டார். அவர்களின் பயணத்தில் அவர்களை ஆசீர்வதிப்பதாக அவர் உறுதியளித்தார்.

ஆதியாகமம் 12:1–3; ஆபிரகாம் 2:2–4

படம்
ஆபிரகாமும் சாராளும் ஆடுகளைப் பராமரிக்கிறார்கள்

ஆபிரகாமும் சாராளும் கர்த்தரை நம்பி ஊரை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் பிள்ளைகளைப் பெற முடியாததால் அவர்கள் துக்கமடைந்தனர். கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்று அவர் வாக்களித்தார்.

ஆதியாகமம் 11:30–31; 5:1–6; 17:2–16; ஆபிரகாம் 2:6–9

படம்
தேவன் ஆபிரகாமுக்குத் தோன்றுகிறார்

அவரைப்பற்றி மேலும் அறிய ஆபிரகாம் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் ஆபிரகாமைச் சந்தித்து தன்னை யேகோவா என்று அழைத்தார். யேகோவா ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கை செய்தார். ஆபிரகாம் ஆசாரியத்துவம் பெறுவான் என்று அவர் வாக்களித்தார். ஆபிரகாமின் குடும்பத்தின் மூலம், பூமியின் அனைத்து குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் அவர் வாக்களித்தார்.

ஆபிரகாம் 2:6–11

படம்
ஆபிரகாமும் சாராளும் ஒட்டகங்களுடன் பயணம் செய்கிறார்கள்

ஆபிரகாமும் சாராளும் பயணம் செய்தபோது, அவர்கள் உணவைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவர்கள் கானான் என்றழைக்கப்பட்ட தேசத்தில் வாழ முயன்றனர். அங்கு உணவு இல்லை, எனவே அவர்கள் எகிப்துக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் எகிப்தில் வாழ்வது அவர்களுக்கு ஆபத்தாயிருந்தது.

ஆதியாகமம் 12:10–20; ஆபிரகாம் 2:21–25

படம்
ஆபிரகாமும் சாராளும் விலங்குகளைப் பார்க்கிறார்கள்

ஆபிரகாமும் சாராளும் எகிப்திலிருந்து வெளியேறி கானானில் வசிக்கத் திரும்பினர். எகிப்திலிருந்து உணவு மற்றும் விலங்குகளை அவர்களுடன் கொண்டு வந்தார்கள். கர்த்தர் அவர்களுக்கு வாக்குறுதியளித்த தேசத்தின் ஒரு பகுதி கானான்.

ஆதியாகமம் 13:1–4,12; ஆபிரகாம் 2:19

படம்
மெல்கிசேதேக்கு, ஆபிரகாமுடனும் சாராளுடனும் பேசுதல்

ஆபிரகாம் ஆசாரியத்துவத்தைப் பெறுவான் என்ற அவருடைய வாக்குறுதியைக் கர்த்தரும் காத்துக் கொண்டார். ஒரு நாள் ஆபிரகாமும் சாராளும் மெல்கிசேதேக்கு என்ற பெயருள்ள நீதியுள்ள ஒரு ராஜாவை சந்தித்தார்கள். ஆபிரகாம் அவனுக்கு தசமபாகத்தைச் செலுத்தினான்.

ஆதியாகமம் 14:18–24; ஆல்மா 13:15

படம்
மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்தல்

ஆபிரகாம் மெல்கிசேதேக்கிடமிருந்து ஆசாரியத்துவத்தைப் பெற்றான். ஆதாம், நோவா தீர்க்கதரிசிகள் பெற்ற ஆசாரியத்துவம் இதுதான்.

ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, ஆதியாகமம் 14:36–40; ஆபிரகாம் 1:2–4; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:14

படம்
ஆபிரகாமும் சாராளும்

ஆபிரகாமும் சாராளும் கானானில் மகிழ்ச்சியாக இருந்தார்கள், ஆனால் அவர்களுக்கு ஒரு குழந்தை இல்லாததாலேயே அவர்கள் கவலைப்பட்டார்கள். ஒரு நாள் தங்கள் குடும்பம் வளர்ந்து பூமி முழுவதையும் ஆசீர்வதிக்கும் என்ற கர்த்தரின் வாக்குறுதியை அவர்கள் நம்ப வேண்டியிருந்தது.

ஆதியாகமம் 13:12; 15:3–6

அச்சிடவும்