வேதக் கதைகள்
மோசே தீர்க்கதரிசி


“மோசே தீர்க்கதரிசி,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“மோசே தீர்க்கதரிசி,” பழைய ஏற்பாட்டு கதைகள்

யாத்திராகமம் 2–3

மோசே தீர்க்கதரிசி

கர்த்தருடைய மக்களை விடுவிக்க அழைக்கப்பட்டான்

எகிப்தியர் இஸ்ரவேலரை வெல்லுதல்

மோசே பார்வோனின் மகளின் மகனாக வளர்ந்தான். எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இழிவாக நடத்துகிறார்கள் என்பதை மோசே கண்டான். எகிப்தியர்கள் இஸ்ரவேலரை தங்கள் அடிமைகளாக்கியதால் அவன் சோகமாக இருந்தான்.

யாத்திராகமம் 2: 10–11

மோசே இஸ்ரவேலனைக் காத்தல்

ஒரு எகிப்தியன் ஒரு இஸ்ரவேலனை அடிப்பதை ஒரு நாள் மோசே கண்டான். இஸ்ரவேலனைப் பாதுகாக்க, மோசே எகிப்தியனைக் கொன்றான்.

யாத்திராகமம் 2:11–14

மோசே வனாந்தரத்தில்

பார்வோன் அதைக் கண்டுபிடித்ததும், மோசேயைக் கொல்ல விரும்பினான், ஆனால் மோசே எகிப்திலிருந்து ஓடிவிட்டான்.

யாத்திராகமம் 2:15

மோசே மற்றும் குடும்பத்தினர்

மோசே மீதியான் என்ற இடத்திற்கு வந்தான், அங்கு சிப்போராள் என்ற பெண்ணை அவன் சந்தித்தான். அவர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றார்கள்.

யாத்திராகமம் 2: 21–22

மோசே எரியும் புதரைப் பார்க்கிறான்

மீதியானில் வசிக்கும் போது, மோசே நெருப்பில் எரிந்த ஒரு புதரைக் கண்டான், ஆனால் நெருப்பு புதரை எரிக்கவில்லை. கர்த்தர் நெருப்பில் தோன்றி மோசேயுடன் பேசினார்.

யாத்திராகமம் 3: 1–6

இயேசு மோசேயுடன் பேசுகிறார்

எகிப்தில் இஸ்ரவேலர் துன்பப்படுவதை அவர் அறிந்திருப்பதாக கர்த்தர் சொன்னார். எகிப்துக்குத் திரும்பி, இஸ்ரவேலரை விடுவிக்கும்படி பார்வோனிடம் சொல்லும்படி அவர் மோசேக்குக் கட்டளையிட்டார். கர்த்தர் இஸ்ரவேலரை விடுவித்து அவர்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மோசேக்கு உதவுவார் என்று கூறினார்.

யாத்திராகமம் 3: 7–18