Scripture Stories
எலிசாவும் கர்த்தரின் சேனையும்


“எலிசாவும் கர்த்தரின் சேனையும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“எலிசாவும் கர்த்தரின் சேனையும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

2 இராஜாக்கள் 6

எலிசாவும் கர்த்தரின் சேனையும்

கர்த்தரின் அக்கினி இரதங்கள்

படம்
வீரர்கள் பட்டணத்தைச் சூழுதல்

அசீரியர்கள் இஸ்ரவேலரை விரும்பவில்லை. எலிசா தீர்க்கதரிசியை பிடிக்க அசீரிய ராஜா தனது சேனையை அனுப்பினான். இரவில், சேனை எலிசா இருந்த பட்டணத்தைச் சூழ்ந்தது.

2 இராஜாக்கள் 6:8–14

படம்
எலிசாவும் வேலைக்காரனும் அசீரிய இராணுவத்தைப் பார்த்தல்

எலிசாவின் இளம் வேலைக்காரன் எழுந்து அசீரிய சேனையைக் கண்டான். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவன் எலிசாவிடம் கேட்டான். பயப்பட வேண்டாம் என்று எலிசா அந்த இளைஞனிடம் கூறினான். அவர்களுக்கு எதிராக போராடும் சேனையை விட அவர்களுக்காக போராடும் சேனை மிகப் பெரியது என்று அவன் கூறினான்.

2 இராஜாக்கள் 6:15–16

படம்
அக்கினி ரதங்களுடன் பரலோக சேனை

தான் பார்த்ததை அந்த இளைஞனுக்குக் காட்டும்படி எலிசா கர்த்தரிடம் கேட்டான். அவர்களைக் காப்பதற்காக குதிரைகள் மற்றும் அக்கினி ரதங்களைக் கொண்ட பரலோக சேனையை கர்த்தர் அவனுக்குக் காட்டினார். அசீரிய சேனை தேவனின் வல்லமையால் குருடாக்கப்பட்டது. அவர்கள் அதன் பின்னர் இஸ்ரவேலர்களுக்கு எதிராக போராடவில்லை.

2 இராஜாக்கள் 6:17–23

அச்சிடவும்