Scripture Stories
யோசேப்பும் பஞ்சமும்


“யோசேப்பும் பஞ்சமும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“யோசேப்பும் பஞ்சமும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 42–46

யோசேப்பும் பஞ்சமும்

அவனுடைய குடும்பத்தை ஒன்றிணைக்க ஒரு சகோதரனின் வாய்ப்பு

படம்
யாக்கோபு தனது மகன்களை எகிப்துக்கு அனுப்பினான்

யாக்கோபுவின் குடும்பம் பஞ்சத்தினிமித்தம் பசியோடு இருந்தது. ஆகவே, உணவு வாங்குவதற்காக யாக்கோபு தனது மகன்களை எகிப்துக்கு அனுப்பினான். அவன் தனது இளைய மகன் பென்யமீனை வீட்டில் வைத்திருந்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் யோசேப்பை இழந்தது போல் பென்யமீனை இழக்க அவன் பயந்தான். அவனுடைய மூத்த மகன்கள் யோசேப்பை அடிமையாக விற்றது அவனுக்குத் தெரியாது.

ஆதியாகமம் 42:1–4

படம்
சகோதரர்கள் யோசேப்பிடம் உணவு கேட்டல்

இந்த நேரத்தில், யோசேப்பு எகிப்தில் ஒரு சிறந்த தலைவனாக இருந்தான். பஞ்சத்தின் போது அவன் உணவு விற்பனை செய்யும் பொறுப்பில் இருந்தான். சகோதரர்கள் யோசேப்பை சந்தித்து உணவு கேட்டனர். அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை.

ஆதியாகமம் 42:5–8

படம்
யோசேப்பு பேசுதல்

யோசேப்பு அவர்களை அடையாளம் கண்டுகொண்டான், ஆனால் அவன் அவர்களை அறியாதது போல் நடித்தான். அவன் தனது தகப்பன் மற்றும் சகோதரன் பென்யமீன் உயிருடன் இருக்கிறார்களா என்று பார்க்க அவர்களின் குடும்பத்தைப்பற்றி கேட்டான்.

ஆதியாகமம் 42:10–14

படம்
சகோதரர்கள் உணவுடன் புறப்படுதல்

பின்னர் யோசேப்பு தனது சகோதரர்களுக்கு உணவு கொடுத்தான். அவர்களுடன் தங்களுடைய இளைய சகோதரன் பென்யமீனை உடன் கொண்டு வரவில்லை என்றால் அதிக உணவுக்காக திரும்பி வர வேண்டாம் என்று அவன் கூறினான்.

ஆதியாகமம் 42:15–20

படம்
சகோதரர்கள் எகிப்துக்குத் திரும்புதல்

குடும்பத்தில் மீண்டும் உணவு தீர்ந்தபோது, யாக்கோபு தனது மற்ற மகன்களுடன் மீண்டும் எகிப்துக்கு பென்யமீனை அனுப்ப வேண்டும் என்று அறிந்தான். பென்யமீன் போக அனுமதிப்பதைப்பற்றி யாக்கோபு இன்னும் பயந்தான். ஆனால் சகோதரர்களில் ஒருவரான யூதா, பென்யமீனை பத்திரமாகப் பாதுகாப்பதாக உறுதியளித்தான்.

ஆதியாகமம் 43:1–15

படம்
சகோதரர்கள் வெள்ளி கோப்பையை திருடியதாக யோசேப்பு குற்றம் சாட்டுதல்

சகோதரர்கள் எகிப்துக்குத் திரும்பியபோது, பென்யமீன் ஒரு வெள்ளி கோப்பையைத் திருடியது போல் யோசேப்பு தோன்றச் செய்தான். அவன் தனது மூத்த சகோதரர்கள் மாறிவிட்டார்களா என்று பார்க்க விரும்பினான். பென்யமீனைத் தண்டிக்காமல், யூதாவை தண்டிக்கும்படி யூதா யோசேப்பிடம் கெஞ்சினான்.

ஆதியாகமம் 44

படம்
யோசேப்பு தான் யார் என்பதைக் காட்டுதல்

யோசேப்பு தனது சகோதரர்கள் மாறிவிட்டதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். அவனைப் பாதுகாக்கும் அளவுக்கு பென்யமீன் மீது அவர்கள் அன்பு செலுத்தினர். எனவே, கடைசியாக, யோசேப்பு அவர்களிடம் தான் யார் என்று கூறினான்.

ஆதியாகமம் 42:21–24; 45:1–4

படம்
யோசேப்பு தனது சகோதரர்களை கட்டியணைத்தல்

யோசேப்பு தன்னை அடிமையாக விற்ற சகோதரர்களை மன்னித்தான். அவர்கள் குடும்பம் பஞ்சத்தில் இருந்து தப்பிக்க உதவ கர்த்தரின் வழி இது என யோசேப்பு சொன்னான்.

ஆதியாகமம் 45:5–8

படம்
சகோதரர்கள் யாக்கோபுவிடம் ஓடுதல்

யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் திரும்பி வந்து நடந்த அனைத்தையும் சொன்னார்கள். யாக்கோபு தனது முழு குடும்பத்தையும் எகிப்துக்கு மாற்றினான்.

ஆதியாகமம் 45:24–28; 46:1–26

படம்
எகிப்தில் யோசேப்பு மற்றும் யாக்கோபு, பார்வோன் பார்த்தல்

யாக்கோபின் குடும்பத்தை பார்வோன் வரவேற்றான். அவர்கள் ஏராளமான உணவை பெறும்படிக்கு, அவன் அவர்களுக்கு நிலத்தையும் விலங்குகளையும் கொடுத்தான். யாக்கோபின் குடும்பம் நீண்ட காலம் சமாதானமாக வாழ்ந்தது.

ஆதியாகமம் 45:16–23

அச்சிடவும்